வெருளி நோய்கள் 709 -713 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 704 -708 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 709 -713 709. கழுவுத் தூள் வெருளி-Wajjeophobia ஏனம் கழுவிக்கான தேய்ப்புத்தூள் (dishwasher detergent) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கழுவுத் தூள் வெருளி. தேய்ப்புத் தூள் என்றால் கைகளால் பாத்திரங்களை அலம்பும் பொழுது பயன்படுத்தும் தூளைக் குறிக்கும். காண்க: கழுவு நீர்ம வெருளி – Xiwophobia 00 710. களவு வெருளி – Cleptophobia/Kleptophobia நம்மிடம் இருந்து யாரும் திருடி விடுவார்கள் என்ற அச்சமும் நாம் யாரிடமிருந்தாவது திருடுவோம் என்ற அச்சமும்…
வெருளி நோய்கள் 704 -708 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 699-703: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 704 -708 704. கழுதை வெருளி-Gaidouriphobia கழுதை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதை வெருளி. கழுதை உதைத்து வீழ்த்தி விடும் என்று தேவையின்றிப் பேரச்சம் கொள்கின்றனர். Gaidouri என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கழுதை. 00 705. கழுதைக் குரங்கன் வெருளி – Donkeykongphobia காணாட்டங்களில் இடம்பெறும் புனைவுரு கழுதையான கழுதைக் குரங்கன் (Donkeykong) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதைக் குரங்கன் வெருளி. 00 706. கழுதைப்புலி வெருளி – Yainaphobia கழுதைப்புலிபற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம்…
க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார்
(கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! – திருத்துறைக்கிழார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௩. போலித் தமிழர் இன்று தமிழ் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்கின்றனர். கிறித்தவர், இசுலாமியர், இந்துக்கள், சமணர், சீக்கியர், பௌத்தர் முதலிய மதத்தினரும், முதலியார், நாயக்கர், இரெட்டியார், நாயுடு, மராட்டியர், வேளாளர், தேவாங்கர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், கௌடர், படையாட்சி, பள்ளர், பறையர், அம்பலக்காரர், முத்தரையர், பார்ப்பனர் முதலிய பல குலத்தினரும், தெலுங்கர், மலையாளர், கன்னடர், தமிழர், ஆங்கிலர், இந்தியர், மராட்டியர், சௌராட்டிரர், குசராத்தியர், சமற்கிருதர்…
கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! – திருத்துறைக்கிழார்
(கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா? தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு இடையூறு செய்தது சரியா? ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் அடைந்தனர். அவர்களை நன்முறையில் நடத்தாமல் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாகக் குற்றம்…
வெருளி நோய்கள் 579-583: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 574-578: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 579-583 579. ஓக்கலகோமா வெருளி- Oklahomaphobia ஓக்கலகோமா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓக்கலகோமா வெருளி. ஓக்கலகோமா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவதாக 1907 இல் இணைந்த மாநிலம். இதன் தலைநகரம் ஓக்கலகோமா நகரம். 00 580. ஓங்கில் வெருளி – Phocodelfiniphobia / Delfiniphobia ஓங்கில் /கடற்பன்றி(dolphin)பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஓங்கில் வெருளி. ஓங்கில் / கடற்பன்றி என்பது திமிங்கில இனத்தைச் சேர்ந்தது. Dolphin/தால்பின் என்பதைத் தமிழில் கடற்பன்றி என்றும் கூறுகின்றனர். கடற்பன்றி…
வெருளி நோய்கள் 574-578: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 569-573: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 574-578 574. ஒறுப்பு வெருளி- Rhabdophobia/ Rhobdophobia/ Mastigophobia/Poinephobia தண்டனை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒறுப்பு வெருளி. குறைகூறப்படுவோம், தண்டிக்கப்படுவோம், கழி, கம்பு, தடி, கம்பி, கோல், மந்திரக்கோல் போன்றவற்றால் அடிக்கப்படுவோம் என்றெல்லாம் காரணமின்றி அச்சம் கொள்வர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு தண்டனை பற்றிய பேரச்சம் கொள்வோர் உள்ளனர். பெரும் பெருங் குற்றங்கள் புரிந்து விட்டுச் செல்வாக்கால் தப்பித்து விட்டு அச்சம் இன்றி இருப்போரும் உள்ளனர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல்…
வெருளி நோய்கள் 569-573: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 564-568: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 569-573 569. ஒளி வீச்சு வெருளி – Selaphobia ஒளி வீச்சு குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளி வீச்சு வெருளி. கால் கை வலிப்பு உள்ளவர்களும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களும் பெரிதும் ஒளி வெருளி உள்ளவர்களாக உள்ளனர். இத்தகையோர் இரவில் வெளியே செல்வதையும் இரவு மன்றங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். selas என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ஒளி எனப் பொருள். காண்க: ஒளி வெருளி (Photophobia) 00 570. ஒளி வெருளி-Photo Phobia வெளிச்சம் கண்டு ஏற்படும்…
க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள்
௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் தொடர்ச்சி) க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் (முதல் பரிசு பெற்ற கட்டுரை) முன்னுரை கடலால் கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தில் முதல், இடை, கடை என்ற முத்தமிழ்க் கழகங்கள் நிறுவி தமிழ் ஆய்ந்தனர், தமிழ் அரசர்களான பண்டையர் (பாண்டியர்). தமிழ் தோன்றிய காலம் வரையறுத்துக் கூறற்கரிதாயுள்ளது. ‘இலமூரியா’க் கண்டம் என்ற குமரிக்கண்டம் ஐந்துமுறை கடலால் கொள்ளப்பட்டது. இந்துமாக்கடல் பரப்பில் இப்பொழுது காணப்படும் சிறு…
௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் – திருத்துறைக்கிழார்
(அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் வரலாற்று அறிஞர்கள், ஆரியர் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக இந்தியாவிலுள்ள செழிப்பான சிந்துசமவெளியில் புகுந்தார்கள் என வரலாறு எழுதியுள்ளனர். இன்றுள்ள ஆரியக் குஞ்சுகள், ஆரியர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு வந்ததை எவன் கூரை மீதிருந்து பார்த்தான் என்றும், பிரித்தாளும் சூழ்ச்சி தெரிந்த ஆங்கிலேயர் ஆரியர், திராவிடர் என்று பிரித்து வரலாறு எழுதிவிட்டனர்…
அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார்
(எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் அ. பழமையும் புதுமையும் பழமை என்பது முதன் மாந்தன் தோன்றி வாழ்ந்து வந்த காட்டுமிராண்டிக் காலம் எனக் கருதிவிடல் வேண்டா. பண்பட்ட நாகரிகமெய்திய நல்வாழ்வு வாழ்ந்த நற்காலத்தையே. அக்காலங் கடந்து இன்றுகாறும் நடைபெறுகின்ற காலத்தையே புதுமையென்று குறிப்பிடுகின்றோம். பழமையில்தமிழர் தனிவாழ்வு வாழ்ந்தனர். உயர்ந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகுக்கு ஊட்டினர். தந்நலம் பெரிதெனக் கருதாது நாட்டுக்கும், மொழிக்கும் நற்பணி புரிந்தனர். தமிழ்மொழி ஒன்றே தமிழரின் ஆட்சிமொழி, பேச்சுமொழி, அனைத்து மொழியுமாக இருந்தது….
எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்
(௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? இன்று தமிழரிடையே நிலவும் பண்பாடு, கலவைப் பண்பாடே; தூய தமிழ்ப்பண்பாடன்று! பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் அழிந்தோ – அழிக்கப்பட்டோ விட்டன. இன்றைய இலக்கியங்களில் முழுக்க முழுக்க ஆரியப் பண்பாடு அல்லது அயல் பண்பாடு இழையோடியுள்ளது! தமிழ்ப்பண்பாட்டின் சாயை ஆங்காங்கு காணப்படுகின்றது. அதனை நுணுகி ஆராய்ந்து – கண்டு வெளிப்படுத்துவதே அறிவு சான்ற தமிழ்ப் பேரறிஞர்தம் தலையாய கடனாம். அதுவே அவர், தமிழுக்கும்…
௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார்
(ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௬. புலமையார்: அன்றும் இன்றும் ‘புலம்’ என்றால், ‘அறிவு’ எனப்பொருள். அது பல்துறை அறிவையும் குறிக்கும். ஆனால் ஈண்டு யாம் எடுத்துக் கொண்டது தமிழ்ப் புலமை பற்றியதேயாம்.பண்டு தமிழ்ப் புலமை தமிழறிவைப் பெருக்கிக் கொள்வதற்கென்றே பெறப்பட்டது. பிறமொழிக் கலப்பே தமிழில் உண்டாகாத காலம் அது. தமிழ்ப் புலமையாளரும் அன்று மிகக் குறைவு. இன்று போல் அச்சிட்ட நூல்கள் அன்று இல்லை. எழுத்தாணியால் ஓலையில் எழுதப்பட்ட சுவடிகளே இருந்தன. ஓர்…
