97. சனாதன நூலாகிய அருத்த சாத்திரம் மக்கள் அனைவருக்கும் உரிய நூல் என்கிறார்களே! 98. அருத்த சாத்திரம் திருக்குறளுக்கும் மூத்த நூல் என்பது பொய்யா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 மார்க்கு மக்கினீசு என்னும் அறிஞர், ‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’ எனக் கட்டுரை எழுதியுள்ளார்.(Is the Arthasastra a mourian document? by Mark Mcclish) இதில் அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து நூலல்ல, இதன் ஆசிரியராகக் கூறப்படும் சாணக்கியர் அல்லது கெளடில்யர் சந்திர குப்புத மன்னரின் அமைச்சர் அல்லர், அவருக்குப்பின் பல நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்த சிலரால் தொகுக்கப்பெற்றது இந்நூல் என அவர் இதில் நிறுவியுள்ளார். அருத்தசாத்திரத்தைக் கெளடில்யன் என்பான்…
94. பிராமணர்களை மட்டும் உயர்த்திச் சொல்வதாகக் கூறுவது தவறானது என்கிறார்களே!+95. சனாதன நூல்கள் நல்ல கருத்துகளையே கூறவில்லையா? + 96. இடைச்செருகல் கருத்துகளைத்தான் பரப்புகிறார்களா?- இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும் சோதியும் அவனை வெறுக்கும். பிராமணன் துன்புறுத்த(இம்சிக்க)த் தகாதவன். இந்திரன் அவனைத் தீச்சொல்லிலிருந்து காப்பான். பிராமணன் இனிமையான உணவை உண்கிறான் என அவ்வுணவு மீது ஆசை கொள்ளும் மதியற்றவன் நூறு முட்களுள்ளதை விழுங்குபவனாவன்; அவன்அதைச் சீரணிக்க இயலாது. பிராமணன் தேவர்களின் இதயத்தோடு அவனை ஏசுபவர்களைத் துவம்சம் செய்கிறான். பிராமணர்கள் எதிரியைத் தொலைவிலிருந்தே அழிப்பார்கள். அரசர்கள் பிராமணனது பசுவைப் புசித்து பாழானார்கள். தேவ பந்துவான பிராமணனை இம்சிப்பவன் முன்னோர்கள் செல்லும உலகத்துக்குச்…
? 93. காயத்திரி மந்திரத்தைப் பிராமணரல்லாத பிறர் சொன்னால் என்ன ஆகும்? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 92 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 புத்தி விழிப்படைய காயத்திரி மந்திர வழிபாடு முதலியவற்றைச் செய்யுமாறு கடஉபநிடதம் கூறுகிறது. காயத்திரி மந்திரத்தைப் பிராமணர்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறது வேதம். இல்லை இல்லை. ஒழுக்கமானவர்கள் யாரும் காயத்திரி மந்திரம் கூறலாம் என இக்கால நஞ்சு நெஞ்சுடையோர் விளக்கம் தருவர். ஆனால் வேதத்தில் அவ்வாறு இல்லை. நம்மை ஏமாற்றுதற்காக இவர்கள் தரும் தவறான விளக்கம் இதுவே. பிராமணர்கள்தான் காயத்திரி மந்திரம் சொல்ல முடியும் என்றால் அவர்கள் மட்டும்தான் அறிவுக்கூர்மை…
92 ?. ஒருவேளை முன்பு சனாதனத்தில் பாகுபாடு இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 தொடர்ச்சி) “எதிரிகளுக்குச் சுரத்தைக் கொடு” என்பது வேதம். “நாத்திகனுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது” என்றவர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (தெய்வத்தின் குரல், தொகுதி 3, பக்கம் 148). “தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்பு போலவே நுழைகிறான்” என்பது ஒரு மொழி பெயர்ப்பு வரி. ஆனால், மூலநூலாகிய சமற்கிருதத்தில் தூயவன் என்று இல்லை. பிராமணன் என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. ஆங்கில மொழி பெயர்ப்பிலும் அவ்வாறுதான் உள்ளது. இதன் மற்றொரு பாடல் “யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்பப் புத்தி உடையவனான…
வெருளி நோய்கள் 6 – 10 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் தொடர்ச்சி) வெருளி நோய்கள் (Phobia) 6 – 10 6. ‘ஆண் குறி ‘/’penis’ சொல் வெருளி – Yinjingphobia ‘ஆண் குறி’ /’penis’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆண் குறி /’penis’ சொல் வெருளி. மறைவுறுப்புப் பெயர்களைப் பொதுவிடங்களில் சொல்லுதல், அவற்றைப் படித்தல், பிறர் சொல்லக் கேட்டல் முதலியவற்றால் அருவருப்பு அடைவோர் இவ்வெருளிக்கு ஆளாகின்றனர். ஆண் குறி தொடர்பாகக் கெட்ட வார்த்தைகள் எனச் சொல்லப்படுவன வழக்கத்தில் உள்ளன. அவற்றை அறிந்தவர்கள் அவற்றில் பொருத்தமான ஒன்றை இங்கே கருதிப்பார்த்துக் கொள்க….
85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 83. 84 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்….
73.சனாதனம் இருப்பதால்தான் கீழோர் எனப்படுவோர் உயர்பதவிகளில் அமர்கின்றனரா? + 74. காலில் பிறந்தவன் சூத்திரன் என்பது எங்ஙனம் இழிவு படுத்துவதாகும் என்கிறார்களே! + 75. திமுக, சனாதன ஒழிப்பு பேசுவது வேடிக்கையாக உள்ளது” – எடப்பாடி பழனிசாமி – பொய்யும் மெய்யும்: இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 70-72 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 73-75 சனாதனத்தால்தான் கீழோர் எனப்படுவோர் ஒடுக்கி வைக்கப்பட்டனர். அவ்வாறிருக்க அதற்கு நேர்மாறாகத் துணிந்து கூறுவோருக்காகத்தான், “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்” எனப் பாரதியார் பாடிச் சென்றார். “அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியாய்ப் பகுத்தார்.” – மனு…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 : அன்றே சொன்னார்கள் 46 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 அகலமாகவும் உயரமாகவும் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையிலும் வீடுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருந்தன எனப் பார்த்தோம். இவ்வாறு, கட்டடவியல் இலக்கணத்திற்கேற்ப நன்கு கட்டப்பட்ட வீடுகளை நன்மனை என்றனர். புலவர் ஓரம்போகியார்(ஐங்குறுநூறு: 292.4; 294.4) புலவர் பரணர்(நற்றிணை : 280.9), புலவர் கண்ணகனார்(நற்றிணை 79.2), புலவர் மதுரை மருதனிளநாகனார்(நற்றிணை : 392.7; அகநானூறு 193.11) ஆகியோர் நன்மனை (நல்மனை) என்று குறிப்பிடுகின்றனர்.வேண்டியவர்க்கு வேண்டியவாறு வழங்கும் வகையில் உணவுப்…
70.அன்பே சிவம் என்பது சனாதனம். – சரியா? + 71. ஞானச் சுடர் விளக்கு ஏற்றியது சனாதனம்.- சரியா? + 72. பணிவைச் சொல்லிக் கொடுத்தது சனாதனம் என்கிறாரே இரங்கராசு – சரியா?
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 67-69 தொடர்ச்சி) அன்பும் சிவனும் இரண் டென்பரறிவிலார் அன்பே சிவ மாவதற்கும் அறிகிலார் அன்பே சிவ மாவதாகும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. என்பது திருமூலர் கூற்று. அன்பு, அன்பிலிருந்து பிறக்கும் அருள் (அன்பு ஈன் குழவியாகிய அருள்) எவ்வகை வேறுபாடின்றி எல்லா உயிர்களிடத்தும் காட்ட வேண்டிய பண்பாகும். குடும்பத்திலுள்ள பெற்றோர், உடன் பிறப்புகள், வாழ்க்கைத் துணை, மக்கள், பிறர், பிற உயிர்கள் என அனைத்துத் தரப்பாரிடமும் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் காட்டப்படுதே அன்பு என்னும் நெறி. இதுவே…
67.சனாதனம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் அடையாளமாகும் – கண்ணதாசன் 68. இந்து தருமம் என்பதற்கு மிகவும் பொருத்தமான சொல் சனாதனம் 69. இந்து தருமம் மட்டுமே சனாதனம் – இராமகிருட்டிணர். இப்பொய்மையைக் காண்போம் – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 65-66 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 67-69
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 அன்றே சொன்னார்கள் 45 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 பழந்தமிழ்நாட்டில், பெரிய அகன்ற மாடிகள் பலவற்றை உடைய நகரத்தைப் போன்ற சிறப்பான மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தோம். அவை வெறும் கட்டடங்களாக மட்டும் அல்லாமல் செல்வச் செழிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கியமையால் வளமனை என்றும் திருமனை என்றும் செல்வமனை என்றும் சிறப்பாகச் சொல்லப்பட்டன.பண்பார்ந்த பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தை உடைய தொன்மையான ஊரில் உள்ள செழுமையான வீடு குறித்துக் கல்லாடனார்பண்பின் முதுகுடிநனந்தலை மூதூர் . . …..செழுநகர்…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3: அன்றே சொன்னார்கள்43 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3 பழந்தமிழர்கள், மாடம் என்று பலமாடிக் கட்டடங்களையே குறித்துள்ளனர். மிகுதியாக மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் நெடுநிலை மாடங்கள் எனப்பட்டன. பொதுவாக 7 மாடிக்கட்டங்கள் இருந்துள்ளன. இவற்றுள் தரைத்தளம் பொதுவாகவும் பிற பருவச் சூழல்களுக்கேற்ப வெம்மை தாங்குவன, தென்றல் வீசுவன, என்பன போன்றும் இருந்திருக்கின்றன. இளங்கோ அடிகள் அவர்கள் கோவலன், கண்ணகி ஆகிய இருவரும் நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி (இருந்த பொழுது) எவ்வாறு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறார் (சிலப்பதிகாரம் : 1:2:…
