கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்
( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்- -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை கோமகன் நிகழ்ந்தன கூறல் இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன் வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென 135 வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட் பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம், தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக் கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம் 140 மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம், மெல்லியல் அல்லியை…
உ.வே.சா.வின் என் சரித்திரம் : 128- அத்தியாயம்-87: கவலையற்ற வாழ்க்கை
(உ.வே.சா.வின் என் சரித்திரம் : 127 – சிலப்பதிகார ஆராய்ச்சி – தொடர்ச்சி) என் சரித்திரம் கவலையற்ற வாழ்க்கை நான் வேலையை ஒப்புக்கொண்டபோது கும்பகோணம் கல்லூரியில் உயர்நிலைப்பள்ளி வகுப்புக்களும் இருந்தன. அவ் வகுப்புக்களுக்கு திரு தி.கோ.நாராயணசாமி பிள்ளை என்பவர் தமிழ்ப் பாடம் சொல்லி வந்தார். கல்லூரி வேலை தானாக என்னைத் தேடி வந்தாலும் அதனைப் பெறுவதற்குப் பலர் முயற்சி செய்தார்களென்ற செய்தியை நான் அறிந்த போதுதான் அவ்வேலையின் அருமை எனக்குப் புலப்பட்டது. பங்களூர்க் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளையும், இராமாயண வெண்பாவும்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 26 : புலவர் கா.கோவிந்தன்: சேர, சோழ, பாண்டிய அரசுகள்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 25 : காத்தியாயனரும் பதஞ்சலியும் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு உலகம் தோன்றிய நாள்தொட்டு இருந்த சேர சோழ பாண்டியர் இதைப் பண்டைக் காலத்திய மதுரை பற்றிய நாம் அறிந்தனவற்றோடு ஒன்றுபடுத்திக் காணும் முயற்சியில், வெற்றி காணமாட்டாதே, அறிவுத்திறன் பெருமளவில் பாழ்படுத்தப்பட்டது. முன்பே குறிப்பிடப்பட்ட எறும்பு மனிதர் பற்றிய, அவருடைய வேறு ஒரு கட்டுக்கதை போல (Macrindle. Ancient India as described by Megasthenes and Arrian. Page : 144) இது, மெகத்தனிசு அவர்களின், எதையும்…
௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! – வி.பொ.பழனிவேலனார்
(௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்? – புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்தமிழ் ௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது. அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும். இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும். பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது. மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது. தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது.தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம்,…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்
( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா? -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை வஞ்சியின் வஞ்சினம் பிணைவிழி மாதின் பெறலரும் இளமை அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன்; இவள்நலம் விழையும் இளவல் கோமகன் தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு 95 குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை; பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல் அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்; படுத்தே னாயின் பாழுயிர்ச் சுமையை விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்’றெனத் 100 —————————————————————…
உ.வே.சா.வின் என் சரித்திரம் : 127 – சிலப்பதிகார ஆராய்ச்சி
(உ.வே.சா.வின் என் சரித்திரம் : 126 : விடுமுறை நிகழ்ச்சிகள்-தொடர்ச்சி) என் சரித்திரம் சிலப்பதிகார ஆராய்ச்சி நான் வேலையை ஏற்றுக் கொண்ட வருடத்தில் சிலப்பதிகாரத்தில் கானல்வரி முதல் நான்கு காதைகள் பாடமாக வந்திருந்தன. அதைக் கோடை விடுமுறை முடிந்தவுடன் பாடம் சொல்ல வேண்டியவனாக இருந்தேன். “இவர் சிலப்பதிகாரத்தை எப்படிப் பாடம் சொல்லப் போகிறார்?” என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்ததாக என் காதில் பட்டது. ஆகவே அதைக் கூடிய வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்து கொண்டேன். இருந்த அச்சுப் பிரதியின் உதவி…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 25 : புலவர் கா.கோவிந்தன்: காத்தியாயனரும் பதஞ்சலியும்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 24 : புலவர் கா.கோவிந்தன்: சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 8. வடக்கும் தெற்கும் கி.மு. 500 முதல் கி.மு.1 வரை காத்தியாயனரும் பதஞ்சலியும் பாணினியின் “அட்டாத்தியாயீ’ குறையுடையது எனக் கண்டு, பாணினியின் விதிமுறைகளுக்குத் துணையாக வாத்திகம் அஃதாவது உரைவிளக்கம் எழுதிய காத்தியாயனர், பாணினிக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரும்பாலும் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார். தமிழ்ப்பேரகராதி துணை ஆசிரியர் திருவாளர். பி.எசு. சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தந்த ஒரு குறிப்பின்படி காத்தியாயனார்,…
௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்? – புலவர் வி.பொ.பழனிவேலனார்
(உ. உயர்தனிச் செம்மொழி : வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்தமிழ் ௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?முன்னுரை உலக மொழிகளுள் முதன்மையானதும், பண்பட்டதும் தமிழ்மொழி ஒன்றே. எழுத்துகள் செப்பமாயமைந்தது; மென்மை, வன்மை, இடைமை ஒலிகளையுடைய எளிய இனிய மொழி; ஒரு சொற்கு ஒரு பலுக்கல் உடையது; ஒரு சொல்லில் உள்ள எல்லா எழுத்துகளும், ஒலிக்கும் இயல்புடையது. எழுத்து மாற்றம் வீரமாமுனிவரால் செய்யப் பெற்றபின், பெரியார் வழி பற்றி, தற்போது தமிழக அரசு ஓரளவு எழுத்துச் சீர்திருத்தம் செய்துளது. இதற்குமேல் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்றாலும்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 91 : பருவம் பாழ்படுவதா?
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை-தாெடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை பருவம் பாழ்படுவதா? சிறியவள் இல்லறச் செந்நெறிப் படாஅது பருவமும் உருவமும் பாழ்படப் புறநெறி 55 கருதின ளாகிக் கழிவது முறையோ? தேடருங் குறிஞ்சித் தேனினைப் பாழ்செயும் மூடரும் உளரோ? முக்கனி யாகிய தேமாங் கனியும், தீஞ்சுவைப் பலவும், கொழுங்குலை வாழைச் செழுங்கனி யதுவும் 60 அழுங்கல் எய்திட விழுந்து புழுதியில் நைந்து சிதைவதில்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் : 126 : அத்தியாயம்-86 : விடுமுறை நிகழ்ச்சிகள்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-86 விடுமுறை நிகழ்ச்சிகள் திருவாவடுதுறையில் நான் இருந்த காலங்களில் அருகிலுள்ள ஊர்களில் இருந்த செல்வர்கள் வீட்டுக் கலியாணங்களுக்கு மடத்தின் பிரதிநிதியாகச் சென்று வருவேன். கலியாண தம்பதி களுக்கு வழங்கும்படி ஆதீன கர்த்தர் ஆடை முதலியன அளிப்பார். நான் அவற்றைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விட்டு வருவேன். கல்லூரிக் கோடை விடுமுறைக் காலத்தில் திருவாவடுதுறையில் நான் தங்கியிருந்தபோது இத்தகைய சந்தர்ப்பம் ஒன்று நேர்ந்தது. அந்த வருடம் மே…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 24 : புலவர் கா.கோவிந்தன்: சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 23 : புலவர் கா.கோவிந்தன் – வெளிநாட்டு வாணிகம்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம் (J.R.A.S. 1910 Page: 204). கிறித்து ஆண்டுத் தொடக்கத்திற்குப் பின்னர், இந்தியத் துறைமுகங்களிலிருந்து நேராகவோ, அரேபிய, எகித்திய இடைத் தரகர்கள் வழியாகவோ, உரோமானியர் பெற்றுக் கொண்ட வேறுபிற எண்ணற்ற இந்தியப் பண்டங்கள் பற்றிய ஆவணங்கள் நம்மிடையே உள்ளன. இப்பொருள்களின் வணிகப் போக்குவரத்து, மேலும், பழமைவாய்ந்த காலத்திலிருந்தே வழக்காற்றில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அக்காலத்தைச் சேர்ந்த அகச்சான்று எதுவும் நம்மிடையே இல்லை….
உ. உயர்தனிச் செம்மொழி : வி.பொ.பழனிவேலனார்
(க. தமிழ் வளர்ப்போம்– வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்தமிழ் உ. உயர்தனிச் செம்மொழி ஒருவர் (எவர் பெயரையும் குறிப்பிட விரும்புகிலேம்) தமிழில் பேச்சுமொழியை ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்யவேண்டும் என்கின்றார்; வேறொருவர், பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தாம் தமிழ் வளர்ச்சியடையும் என்கின்றார்; இன்னொருவர், அறிவியல் கருத்துகளைத் தமிழில் எழுத, பேசப் பிறமொழிச் சொற்களை அவ்வாறே எடுத்தாள வேண்டும். அன்றுதான் அறிவியல் தமிழ் வளரும் என்று சொல்கின்றார்; ஆங்கில மொழியைப் பின்பற்றி எழுத வேண்டும் என்கின்றார் மற்றொருவர்; ‘தமிழ்க் கழகங்கள் முத்தமிழ் வளர்த்தன என்பதெல்லாம் கட்டுக்கதை; தமிழ்ச்சங்கங்கள்…
