கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 90 : 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு-தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை வஞ்சியின் ஏக்கம் பூங்கொடி அளவிலாப் புகழ்நிலை யுறினும் தேங்கெழில் சிதைவுறத் திருமணம் இன்றிக் கொஞ்சும் இளமை கொன்னே கழிய அஞ்சுபொறி அடக்கிய அறவோர் போல நெஞ்செழுங் காதலை நெருப்பினில் பொசுக்கிப் 5 பிஞ்சிற் பழுத்த பேதை ஆயினள்; எவ்வணம் இயம்பினும் எத்துணை மொழியினும் செவ்விய அவள்நிலை சிறிதும் பிறழ்ந்திலள் என்னே இவள்மனம் இருந்த வாறே! பின்னே வாழ்விற் பேதுறு வாளே 10…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 124 : எனக்கு உண்டான ஊக்கம்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-85 கோபால ராவின் கருணை திங்கட்கிழமை பாடம் சொன்னேன். செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாவது மணி எப். ஏ. இரண்டாவது வகுப்பில் நாலடியார் பாடம் நடத்தத் தொடங்கினேன். அப்போது கல்லூரியைப் பார்க்க வந்த ஓர் உத்தியோகத்தருக்கு அங்கங்கே உள்ள வகுப்புகளைக் காட்டிக் கொண்டு வந்த கோபாலராவு நான் இருந்த அறைக்குள் அவருடன் வந்தார். அவர்களைக் கண்டவுடன் எழுந்த என்னைக் கோபாலராவு கையமர்த்தி விட்டு இரண்டு நாற்காலிகளைக் கொணர்ந்து போடச் செய்து ஒன்றில்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 23 : புலவர் கா.கோவிந்தன் – வெளிநாட்டு வாணிகம்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 22 – சாதகக் கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும் – தொடர்ச்சி) 7. வெளிநாட்டு வாணிகம் கி.மு. 1000 – 500 பாலத்தீனமும் இந்தியாவும் கி.மு. பத்தாம் நூற்றாண்டில், சிபாவின் அரசி {Queen of Sheba) சாலமன் அரசனுக்கு (King of Solomon) ‘மிளகு போலும், உணவுக்கு மணமூட்டும் பொருள்களின் மிகப்பெரிய குவியலையும், கிடைத்தற்கரிய மதிப்பு மிக்க இரத்தினக் கற்களையும் கொடுத்தாள். சீபா அரசி, சாலமன் அரசனுக்குக் கொடுத்த, மணப்பொருளின் இக்குவியல் போலும் ஒரு மணப்பொருள் குவியல் மீண்டும் வரவேயில்லை. (I Kings….
க. தமிழ் வளர்ப்போம்– வி.பொ.பழனிவேலனார்
(௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும் சொற்களும் திருத்தமும் – -தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ் க. தமிழ் வளர்ப்போம் இலக்கியம் எனின், மக்கள் வாழ்க்கைக் குறிக்கோளை இயம்புவது எனப் பொருள். இலக்கணம் என்றால், வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும், இலக்கணமும், (இ)லட்சியம், (இ)லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர். தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர். ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை, வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர். ஆரியர்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்- தொடர்ச்சி) பூங்கொடி சண்டிலியின் அழைப்பு பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன் பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன் விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை ————————————————————— தொக்கு – சேர்ந்து, வரூஉம் – வருவான். ++++++++++++++++++++++++++++++++++++ ஊட்டிய தலைவீ ! ஒன்றுனை வேண்டுவல் பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட 270 நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர் ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின் வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன் அரிவைநீ அருளுடன்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 124 : எனக்கு உண்டான ஊக்கம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 123 : இரண்டாவது பாடம்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-84 எனக்கு உண்டான ஊக்கம் இரண்டாம் நாள் (17-2-1880) நான் வழக்கப்படி கல்லூரிக்குச் சென்று பாடங்களை நடத்தினேன். தியாகராச செட்டியார் அன்று மூன்று மணிக்கு மேல் வந்து நான் பாடம் சொல்லுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு மேல், சீநிவாசையர் செட்டியாரிடம் வந்து, “இன்று நான்கு மணிக்கு மேல் தமிழ்ப் பாடம் எந்த வகுப்பிற்கு என்று இராயர் கேட்டார். அந்த வகுப்பிற்கு அவர் ஒரு வேளை வரலாம். சாக்கிரதையாகப்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 22 – சாதகக் கட்டுக்கதைகளும் தென்இந்தியாவும் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு சாதகக் கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும் பிற்காலத்தில் கெளதம புத்திரராக உயர்ந்துவிட்ட போதிசத்தரின் எண்ணற்ற பிறப்புகள் குறித்த கட்டுக்கதைகளின் தொகுப்பாகிய சாதகக் கட்டுக்கதைகள் என்ற நூல் வட இந்தியரிடையே, ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிலும் வழக்கில் இருந்த, தருமவிரோத பௌத்த வழிபாட்டு நெறியின் நாட்டுப்புறக் கட்டுக்கதைகளின் ஆவணம் ஆகும். இக்கதைகள், கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டன. ஆனால், அவை புத்தர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, நாட்டுப்புறக் கட்டுக்கதைகளாக…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 98-100
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 98. எது அறிவு? நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று. மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்? நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று 7வது நபராகத் தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருக்கின்றேன். மன்னன் : [ஆச்சரியமுற்று] முட்டாள்களின் பெயர்களில் என் பெயருமா? நண்பன் :…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20 – பண்டைய பிராமணர்கள் இறைச்சி உண்ணல்- தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடுவருணங்கள் தென்னிந்தியச் சூத்திரகாரர்கள் வகுத்த வாழ்க்கைச் சட்டங்களெல்லாம், முக்கியமாக, அக்கால அளவில், தமிழ்நாட்டில் மிகச் சிலராகவும், கோதாவரியப் பள்ளத் தாக்கின் தலைப்பில், மிகப் பலராகவும் வாழ்ந்திருந்த பிராமணர்களைக் குறித்தனவே, அச்சூத்திரங்கள், நான்கு பெருஞ்சாதிகளையும், எண்ணற்ற கலப்புச் சாதிகளையும் குறித்துப் பேசுகின்றன என்றாலும், அவை கூறும் சட்டங்களில், ஏனையோரிலும், பிராமணர் குறித்தே , அவை தாமும் அக்கறை கொண்டுள்ளன ஆதலின் அவை கூறும் அச்சாதிக் கூறுபாடுகள், வெறும் தத்துவ…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 92-94 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 95. மறதி! ஒரு பெரியவர் தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லாரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து பயணச்சீட்டு கேட்டார். இவர் தன் சட்டைப்பையைப் பார்த்துவிட்டு பணப் பையையும் பார்த்துவிட்டு கைப்பையையும் பெட்டியையும் பார்த்துத் தேடிக் கொண்டே இருந்தார். பயணச்சீட்டை சரிபார்ப்பவர் இவரின் தோற்றத்தைப் பார்த்து, “பெரியவர் பயணச்சீட்டைக் கட்டாயம் வாங்கியிருப்பார். வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றெண்ணி “பெரியவரே, பரவாயில்லை; நீங்கள்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20: புலவர் கா.கோவிந்தன் – பண்டையபிராமணர்கள்இறைச்சிஉண்ணல்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 19 : வட இந்தியாவும்தென் இந்தியாவும் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு ‘’பௌதாயன தரும சூத்திரங்கள் (Sacred Text Book of the East. : பகுதி 14) என்ற தம்முடைய மொழி பெயர்ப்பு நூலில், திருவாளர் பூலர் (Buhler) அவர்கள், அண்ணன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் போலும் உடன் பிறந்தார் இருவரின் மக்களுக்கு இடையிலான திருமணமாக, ‘’மாவல பித்(து)ர்ஃச் வரர் துஃகித், கமனம்” என்ற திருமணத்தைத் தவறான நிலையில் பொருள் கொண்டுள்ளார். இவைபோலும் திருமணங்கள், தென்னிந்தியாவில் முறையானவையே ஆகும்….
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 92-94
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 89-91 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 92. நண்பனின் ஆலோசனை ஒருவன், தன் நண்பன் ஒருவனிடம் சென்று “எனக்கு என் தாய்தந்தையர் இரண்டு பெண்களைப் பார்த்து முடிவுசெய்து, என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். அதில் ஒரு பெண் அழகு. படிப்பு சிறிது உண்டு. நல்ல குணம் உள்ள பெண். ஆனால் பரம ஏழை. “மற்றொரு பெண் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அக்குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாததால் அவ்வளவு சொத்தும் அந்தப் பெண்ணுக்குத் தான் சேரும். ஆனால் அழகு…
