செயற்கரிய ஆற்றும் பிரபாகரன் – இராசுகுமார் பழனிச்சாமி

நாட்டு நலனுக்காகத் தமிழீழத்தில் அமைந்த துறைகள்! வள்ளுவர் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய ஈடு இணையற்ற தமிழனின் பிறந்த நாள் இன்று! செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். உரை : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. எல்லாராலும் இப்படி ஒரு செயலை செய்ய இயலாது. பல கோடித் தமிழர்கள் இம்மண்ணில் வாழ்ந்தாலும் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே தமிழினத்திற்கு அடையாளம் தந்தவர், தமிழர்களுக்கு என்று ஒரு நாட்டைக் கட்டி அமைத்தவர். அப்படியான ஒரு…

அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று – பா சங்கிலியன்

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று அடிமைப்பட்ட தமிழனை அடங்கா தமிழனாக்கிய அண்ணலே நீர் நீடூழி வாழ்க! செந்தமிழர் புகழை பாரெங்கும் பரப்பிய வள்ளலே நீர் நீடூழி வாழ்க! சொல் வீரம் காட்டாத சொக்கத்தங்கமே செயல் தான் வீரமென செய்து காட்டிய செம்மலே நீர் பல்லாண்டு வாழ்க! – ‘சங்கிலியன் பாண்டியன்‎

ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே! 1/2

ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!    தி.பி. 2018, கார்த்திகை 09 / கி.பி.1987 நவம்பர் 25 அன்று, நான் சைதாப்பேட்டைஅலுவலகத்தில் இருந்த பொழுது தம்பி அம்பலவாணன், ஈழமலர் பிறந்த தொலைவரிச் செய்தியை எடுத்து வந்திருந்தான். ஆம், பிறக்கும் முன்னரே ஈழமலர் எனப் பெயர் சூட்டியிருந்தோம். உயிர்க்கொடைப்போராளி திலீபனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், “ஆண் குழந்தை என்றால் திலீபன் எனப் பெயர் சூட்டுவீர்கள், பெண் குழந்தை என்றால் திலீபி என்று பெயர் வைப்பீர்களா” எனத் தம்பி கேட்டான். திலீபன் மட்டுமா? குட்டிமணி, செகன்…

செல்வி தமிழ் மொழி செந்தமிழ் போல் வாழ்கவே! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

புதுவைக் கவிஞர் தமிழ்நெஞ்சன், தன் மகள் செல்வி தமிழ்மொழியின் பிறந்த நாளில் அவரை வாழ்த்திய பாடல்கள் இரண்டு. என்றன் பிள்ளை என்னுயிர் தமிழ்மொழி எல்லா புகழும் பெற்றிடுவாள் – நாம் முன்னம் வாழ்ந்த முத்தமிழ்க் குடியின் மூச்சாய் இருந்து காத்திடுவாள் அறிவில் அன்பில் ஆற்றலில் எல்லாம் அவளே முதலிடம் பிடித்திடுவாள் – குறள் நெறியில் நின்று நீள்வினை ஆற்றிட நெருப்பாய் நின்று வெடித்திடுவாள் வாழ்க்கை எதுவென வள்ளுவம் சொன்ன வழியில் தானே சென்றிடுவாள் – நம்மை சூழ்ந்த கேட்டைச் சுட்டெ ரிக்கும் சுடர்மதி ஆகி…

பொறி. தி.ஈழக்கதிர் – இவன் பெற்றோர் என்நோற்றார் என வியக்க வைத்துள்ளவன்!

பொறி. தி.ஈழக்கதிர் நூறு நூறு ஆண்டுகள் வாழ்கவே!    ஆடி 27, 2046 / ஆக12, 2015 அன்று பிறந்தநாள் பெருமங்கலம் காணும் எங்கள் மகன் தி.ஈழக்கதிர் நல்ல மனைவிமக்கள் பெற்று இல்லறத்தை நல்லறமாக்கி, நலம், வளம் நிறைந்து, தமிழ்நலம் பேணி நூறாண்டிற்கும் மேல்வாழ உள்ளன்புடன் வாழ்த்துகிறோம்!   ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பிள்ளைகள் பற்றிய நினைவு மிகுதியாக இருக்கும். அத்தகைய நினைவுகளில் சிலவற்றை அன்பு மகனின் பிறந்தநாளில் பகிர விரும்புகின்றேன்.   அப்பொழுது சென்னை அண்ணா நகரில் திருவேணி குடியிருப்பில் குடியிருந்தோம். மிக அருகிலுள்ள…

இன்றைய நாள் இனிய நாள் – இளையவன் செயா (மா.கந்தையா)

பெரியார்  ஆண்டு 135  தொ. ஆ. 2880  தி.ஆ.2046 ஆடவை ( ஆனி )  30                         15–07–2015 பிறந்த நாள் !                            ஏ …….மனிதா.. …….! ஏறுபோல் பீடுநடைஅன்று எறும்புபோல் ஊறும்நடைஇன்று ஊறுஏதேனும்  உண்டோ   வீறுகொண்ட   மனமே மாறுபடில்லா  அறிவுகேட்டது  மாறுபடும்  மனமோ ஊறில்லா  …

தமிழியம் காக்கும் ஆய்தம் இலக்குவனார் திருவள்ளுவன் – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நிலம் உயர்வே தம்முயிர் மூச்செனும் திருவள்ளுவன் – செந் தமிழைப் போல தொன்மை மிகுந்த தொண்டறம் செய்யும் திருவள்ளுவன் வள்ளுவம் வழியில் வாழ்வினை ஏற்று வாழு கின்ற திருவள்ளுவன் – திரு வள்ளுவன் குறளை வாழ்வியல் நெறியால் வாழ்ந்து சிறக்கும் திருவள்ளுவன் ஆக்கப் பணிகளை ஆய்ந்தே செய்யும் அன்பர் அறிஞர் திருவள்ளுவன் – தமிழ் நோக்கம் ஒன்றே தம்பணி என்று தளரா துழைக்கும் திருவள்ளுவன் எளியர் தூயர் எப்பணி யாகிலும் எழிலாய் செய்யும் திருவள்ளுவன் – தமிழ்ப் புலியர் வலியர் புடவி…