65. இல்லறத்தான் பணி எனத் திருவள்ளுவர்கூறுவதுவே தமிழ் கூறும் சனாதனம் – சேக்கிழான் 66. சனாதனம் என்றால் மரியாதைக்குரிய ஒழுங்கு முறை எனப் பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. – இவை சரிதானா? : இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 63-64 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 65-66 ? 65 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (திருக்குறள்- 43)உலக வாழ்வை நீத்த முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என ஐவகையினரையும் காப்பதே இல்லறத்தான் பணி என்கிறார் திருவள்ளுவர். இதுவே தமிழ் கூறும் சனாதனம் என்கிறாரே சேக்கிழான். தென்கடலில் மூழ்கிய நம்மவர்களையும் – தென்புலத்தாரையும் – பிறரையும் போற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் ஆரியமோ தமிழர்களையே பழிக்கிறது. அவ்வாறிருக்க இதனை எங்ஙனம் சனாதனம் என்று சொல்ல முடியும்? இப்படித்தான் ஆரியத்திற்குப்…
60.தமிழர்கள் மட்டும்தான் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனரா? + 61.திருமந்திரத்தைச் சனாதனம் என்கிறாரே ஒருவர். – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 அல்ல! அல்ல! அல்ல! இந்தியாவெங்கும் சமற்கிருத எதிர்ப்பு காலந்தோறும் இருக்கத்தான் செய்கிறது. பிற மொழிகளில் உள்ள சமற்கிருத அறிஞர்களே, சமற்கிருதத்தின் பொய்மைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர். பிராகிருத மொழியினர் எந்த அளவிற்குச் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனர் என்பதற்குச் சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம். பிராகிருத காவியத்தை வணங்குவோம் ! அம்மொழியில் கவிதை யாத்தவர்களையும் வணங்குவோம் சமற்கிருதக் காவியத்தைக் கொளுத்துவோம்! யார் அம்மொழியில் காவியம் படைத்தார்களோ அவர்களையும் கொளுத்துவோம்.! – பேராசிரியர் முனவைர் ப.மருதநாயகத்தின், ‘வடமொழி ஒரு செம்மொழியா?’ என்னும்…
57.உபநிடதங்கள் சிறப்பானவையா? + 58. உபநிடதங்கள் உயர்வானவையா? + 59. சனாதனம் சமற்கிருதத்தில் உள்ளதால்தான் தமிழர்கள் எதிர்க்கின்றனர்? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59 சனாதவாதிகளால் பாராட்டப்படும் சந்தோகிய உபநிடதம், “(கடந்த பிறவியில்) இவ்வுலகில் நற்செயல்கள் செய்தவர்கள் அதற்கேற்ப நல்ல பிறப்பை அடைகிறார்கள். அவர்கள் பிராமணராகவோ, சத்திரியராகவோ அல்லது வைசியராகவோ பிறக்கிறார்கள். ஆனால், இவ்வுலகில் கெட்ட வேலைகளைச் செய்தவர்கள், நாயாகவோ, பன்றியாகவோ, சாதியற்றவர்களாகவோ பிறந்து அதற்கேற்ப கெட்ட பிறப்பை அடைகிறார்கள்.” என்கிறது. செய்யும் கருமத்திற்கேற்ப உயர் பிராமணனாகவோ ‘இழி சூத்திரனாகவோ’ பிறப்பான் என்பதை இது கூறுகிறது. இத்தகைய உடநிடதத்தைத்தான் சிறப்பானதாக மதிப்பிற்குரிய மேதை கூறுகிறார். முதலில் உபநிடதம் பொருளைப் பார்ப்போம். உபநிசத்து என்னும்…
