சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 1: மறைமலை இலக்குவனார்
1 கட்டுரையின் நோக்கம்: கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தராக விளங்கிய சங்கத் தமிழர், தம்மைச் சுற்றியும் ஒலிக்கும் ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக்கொண்டனர். வளியின் போக்கையறிந்து நீரில் கலன்களைச் செலுத்தும் முறைமையையறிந்த தமிழர்,நிலத்தில் தம்மைச் சூழ்ந்தமையும் ஒலிகளின் மாறுபாடுகளை வகைப்படுத்தியறிந்து ஊறு நேர வாய்ப்புள்ள வழிகளைத் தவிர்த்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். இனிய ஓசைகளைச் செவியாரத் துய்த்தும் இன்னா ஓசைகளை இனங்கண்டு பிறர்க்குரைத்தும் ஒலிகளை ஒப்புநோக்கிக் கூறியும் தம்மைச் சூழ்ந்திருந்த ஒலிச்சூழலமைவை அவர்கள் ஆய்ந்துரைத்த திறம்…
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் எழுபதாம் ஆண்டுவிழா
ஆனி 08, 2046 / சூன் 23, 2015 செவ்வாய் மாலை 5.30 சென்னை
அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா
அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா அறிவியல் தமிழ் அறக்கட்டளை தொடக்க விழா ஒன்பான் அறிஞர்களுக்கு அறக்கட்டளை விருது வழங்கல் மணவை முசுதபா வாழ்க்கைக் குறிப்பேடு வெளியீடு விருதாளர்களைப் பற்றிய குறிப்பேடு வெளியீடு அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருமங்கல விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை) சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் நடைபெற்றது. கலைமிகு மீனாட்சி குழுவினர் தமிழிசைப்…
‘தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலக்கியச் செல்வாக்கு’ – ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் அமைப்பு அறுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஒய்.எம்.சி.ஏ. என்னும் உலகளாவிய அமைப்பின்.சென்னைக் கிளையின் இலக்கியப்பிரிவாக உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்தஒய்.எம்.சி.ஏ. கட்ட்டத்தின் முதல் மாடியில் செவ்வாய் தோறும் இங்கே பல துறைகளில் அறிவார்ந்த பொழிவுகள் பல்துறை வித்தகர்களால் நிகழ்த்தப்பெற்று வருகின்றன. மே திங்களைத் தவிர ஏனைய அனைத்துத் திங்களிலும் செவ்வாய் தோறும் இக் கூட்டங்கள் கருத்துவிருந்து வழங்கி வருகின்றன. வெளியூரிலிருந்து வருபவர்கள்கூடச் செவ்வாய்க்கிழமை பாரிமுனைப் [பகுதிக்கு வந்து விட்டால் இங்கே வந்து பயனடைந்து செல்வது…
சிங்கப்பூர் லீ குவான் யூ புகழஞ்சலி – ஒளிப்படங்கள்
சென்னை வைகாசி 01, 2046 மே 15, 2015
சிங்கப்பூர் லீ குவான் யூ புகழஞ்சலி , சென்னை
வைகாசி 01, 2046 மே 15, 2015
சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்
புரட்சிக்கவிஞர் 125 ஆம் பிறந்தநாள் விழா 36ஆம் ஆண்டு தமிழர்கலைபண்பாட்டுப் புரட்சிவிழா சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம் சித்திரை 12 & 13, 2046 25.04.2015 & 26.04.2015 சனி & ஞாயிறு தமிழவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், இசைத்தமிழறிஞர் விபுலானந்த அடிகள், பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் படத்திறப்பு கருத்தரங்கம் கவியரங்கம் பொதுவரங்கம் தமிழர்தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் முனைவர் மா.நன்னன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், கவிஞர்…
ஒரு சூத்திரனின் பாடல்கள் – Songs of Sudra by VIKMALI DASS
ஒரு சூத்திரனின் பாடல்கள் பேரா.மறைமலை இலக்குவனார் – பேரா.மறைமலை இலக்குவனார்
தொல்காப்பயிரை ஆரியராகப் புளுகுவதுபற்றிக் கவலைப்படாத தமிழன்
முனைவர் மறைமலை இலக்குவனார்
சமயச் சார்பற்ற மொழியும்- புனிதமான மொழியும்! : மறைமலை இலக்குவனார்
சமயச் சார்பற்ற மொழியும் புனிதமான மொழியும்! புராணங்களின் அடிப்படையை மட்டுமே கொண்டு சமற்கிருதத்தை மொழிகளுள் தலைமைவாய்ந்த மொழியாகக் கூறப்படுவதும் இந்தியப் பண்பாட்டில் ஆரியப்பண்பாடே தலைமைச்சிறப்புடையதாகப் பேசப்படுவதும், சமயச்சார்பற்ற ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மறுத்துரைக்கப்படுவதில்லை. மேலும் இத்தகைய கிளிப்பிள்ளை வாதங்கள் முற்போக்குப் பார்வையுடைய அறிஞர்கள் உள்ளத்திலும் செல்வாக்குப் பெற்றுவிட் டதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது. திராவிட மொழிகளின் தொன்மையை ஏற்றுக்கொள்வதில் முற்போக்கு அறிஞர்கள் காட்டும் தயக்கமும் சமற்கிருதத்துக்குக் கற்பித்துக் கூறப்படும் தொன்மையை மறுத்துரைக்கும் ஆய்வுகளை முன்மொழியாத அமைதியும் வருந்தத்தக்கன. இதன்விளைவாக வரலாற்றைப் புரிந்து கொள்ளுதற்குரிய முறையான…
இராணிமேரிக்கல்லூரி, மொழிபெயர்ப்புக்கருத்தரங்கம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்தும் செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம் சென்னை அறிஞர் போப் அரங்கம் பேராசிரியர் சி.இலக்குவனார் அரங்கம் பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் அரங்கம் மாசி 13, 14, & 15, 2046 – பிப்ரவரி 25,26 & 27, 201 (அழைப்பிதழ்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)
மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் – உரைகள்
ஒய்எம்சிஏ பட்டிமன்றம் மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி வரவேற்புரை : செயலர் கெ.பக்தவத்சலம் தலைமையுரை : பேரா.ப.அர.அரங்கசாமி சிறப்புரை பேரா.மறைமலை இலக்குவனார்
