மொழி உரிமைப்போரில் பேரா.சி.இலக்குவனார் – மறைமலை உரை

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், சென்னை மொழி உரிமைப்போரில் பேராசிரியர் இலக்குவனார் பங்களிப்பு தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி தலைமை : பேரா.ப.அர.அரங்கசாமி நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார்  

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார்   எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார்.   அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்…

கலைச்சொல் தெளிவோம் 15 – நெறியுரை: சில குறிப்புகள்

கலைச்சொல் ஆர்வலர் மிகுதியாக இருப்பினும் கலைச்சொற்கள் கண்டறியுநரும் புதியன புனையுநரும் ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் உள்ளனர். நான் மாணவப்பருவத்திலிருந்தே கலைச்சொற்களில் ஆர்வம் காட்டி வருகின்றேன். நான் ஆட்சித்துறையில் இருந்தமையால்   தமிழ்க்கலைச்சொற்களையும் புதிய கலைச்சொற்களையும் பயன்பாட்டிற்குக் கொணரும் வாய்ப்பு கிடைத்தது. அறிவியல் கலைச்சொற்களைப் பொருத்தவரை கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான் நிலைப்புத்தன்மை கிட்டும். வெறும் அ்கராதியாக இல்லாமல் சொல் விளக்கமாக இருந்தால்தான் புரிந்து கொண்டு பயன்படுத்த இயலும் என்பதால்தான் கலைச்சொல் விளக்கங்கள் அளித்து வருகின்றேன்.ஒரு சொல்லுக்கான பொருளையோ விளக்கத்தையோ தருவதுடன் நில்லாமல் அச்சொல் பயன்பாட்டில் உள்ள பிற இடங்களுக்கும்…

பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்-மறைமலை உரை

சென்னைக் கம்பன்கழகம் சிற்றிலக்கியச் சுற்றுலா பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்- முனைவர் மறைமலை இலக்குவனார் உரை பேரா.மு.இரமேசிற்குத் தமிழ்நிதி விருது வழங்கல் இராம.வீரப்பன் தலைமை மார்கழி 7, 2045 / திசம்பர் 22, 2014 சென்னை  

கண்டீரா ஓர் இறும்பூதை ! : இளையவன் – செயா

மதுரைப் பாவலர் மா.கந்தையா அவர்கள் தமது மாரடைப்பில் நலந்தேறியபின் தமது மக்களுக்க்கு எழுதிய கவிதை மடல் தமிழ் உணர்வும் ஊற்றமும் பெரியாரிய உறைப்பும் மிக்க அப் பாவலர் தமிழ்த்தாய் அருளால் நலமோங்க வாழ வாழ்த்துகிறோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்     கண்டீரா  ஓர்  இறும்பூதை ! திருப்பாற்   கடலில்   திருஅமுதம்  எடுக்க ஒருபுறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் மேருமலையை மத்தாக குறும்பாம்பாம் வாசுகியை பெரும்கயிறாகக் கொண்டு  பெருங்கடலைக் கடைந்தனராம் ! கண்டான்வாலி அனைவரையும் கண்ணால் அகலச்செய்து கையால்  கடைந்தான் ;  கடைந்தவரிடம் அமுதம்தந்தானாம்…

ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா – ஒளிப்படங்கள்

சென்னையில் புரட்டாசி 11, 2045 / 27.09.2014  அன்று நடந்த   ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா, கவிஞர் கவிமுகில் நூல்கள் வெளியீட்டு விழா, கவியரங்கம் பல்வகை விருதுகள் வழங்கிய விழா  ஒளிப்படங்கள்   படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.    

உலகுக்கு வழிகாட்டும் தமிழ்ப்பண்பாடு – பேரா. மறைமலை உரை

ஆவணி 11, 2045 / ஆக.27, 2014 இராசபாளையம் தருமாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம்  

இக்காலத் தமிழ்க் கவிதை—இணையக் களஞ்சியம்

வணக்கம். இக்காலத் தமிழ்க் கவிதைபற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்கி இணையத்தில் வெளியிட விழைகிறேன். இக்காலத் தமிழ்க்கவிஞர்களின்படைப்புகள் குறித்த தகவல்களும் கவிஞர்களின் வாழ்க்கை-வரலாறும் முழுமையாகத்தொகுக்கப்படவேண்டும்.வெறும்விவரப் பட்டியலாக அமைந்துவிடாமல் இக்காலத்தமிழ்க்கவிதை வளர்ச்சியைக் காட்டும் ஆவணமாக இக் களஞ்சியம் அமைய வேண்டும்.ஆயிரக்கணக்கான தமிழ்க்கவிஞர்களையும் பல்லாயிரக்கணக்கான கவிதைநூல்களையும்தொகுத்து வழங்குதல் எளிய முயற்சியன்று.அதேநேரத்தில் அனைத்துக் கவிஞர்களும்ஒத்துழைத்தால் இப் பணியை முழுமையுற நிறைவேற்றிவிட முடியும்.கீழ்க்காணும்தரவுகளை ஒருங்குகுறி (யூனிகோடு)அச்சுருவில் அனுப்பி உதவுக. என் மின்னஞ்சல்:maraimalai@yahoo.com 1) வாழ்க்கைவரலாறு/தன்விவரம் 2) கவிதைப்பணி:முதலில் வெளிவந்த கவிதை-கவிதை வெளிவந்தஇதழ்கள்–காலம்-கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த காலம்–பெற்றவிருதுகள்/பாராட்டுகள் 3) கவிதைத் தொகுப்புகள்- ஒவ்வொரு…

கால்டுவெல் 200 ஆண்டுவிழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா

  சென்னை அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய கால்டுவெல் 200 ஆண்டுவிழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா அறிஞர்கள் நிறைந்தகூட்டமாகப் பொலிந்தது. (ஆவணி 01, 2045 / ஆக.17, 2014 : இடம்-கந்தசாமி நாயுடு கல்லூரி காலை 1030) படங்கள் :  முனைவர் மறைமலை இலக்குவனார் அமுதா பாலகிருட்டிணன்

கம்பன் கழகம் 40-ஆம் ஆண்டுவிழா நிறைவுநாள்

  ஆடி 25, 2045 / ஆக. 08, 2014 காலை கம்பன் கழகம் 40-ஆம் ஆண்டுவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் பேரன் கலைமகன் அவர்களின் வாழ்த்துப்பாடலுடன் தொடங்கியது. தரவு : முனைவர் மறைமலை இலக்குவனார்