வணங்குதற்குரிய வாரம்!
வணங்குதற்குரிய வாரம்! ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை இரண்டாம் வாரம் / நவம்பர் நான்காம் வாரம் உலகத் தமிழ் மக்களுக்குப் போற்றுதலுக்கும்வணங்குதற்குரியதான சிறப்பான வாரமாகும். நவம்பர் 26, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் பெருமங்கலமாகும். வாராது வந்த மாமணியாய் நமக்கு அமைந்த ஒப்பற்ற தலைவர் அவர். ‘கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமை‘(திருக்குறள் 1021)யுடன் வாழும் செம்மல் அவர். சலம்பற்றிச் சால்பில செய்யா மா சற்ற (திருக்குறள் 956) மாமனிதர் அவர். ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே…
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 5
(முன்னிதழ்த் தொடர்ச்சி) போராளிகள் இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அயலவனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய ஒப்படைப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம்மகத்தான ஈகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க ஆற்றல்களின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். . . . . . . . . . . . . ஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. இன அழிவை…