தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
தமிழ்நாடெங்கும், தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிராகப்போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இவைபோல் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400 ஆக்கும் மேற்பட்டோர் தளையிடப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். வைகாசி 14, 2045, மே 28, 2014 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தோழர் பெ.மணியரசன் தலைமை ஏற்க பல்வேறு காட்சித்தொடர்பியல் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் பொது செயலாளர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர், செந்தமிழ்க்குமரன்…
வாக்கு யாருக்கு?
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன. இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில் வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள…
கல்விமொழியும் தமிழே! மத்திய அலுவலக மொழியும் தமிழே! – ம.தி.மு.க. தீர்மானம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் 22-ஆவது பொதுக்குழு 04.02.2014 செவ்வாய்க்கிழமை காலை வானகரத்தில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:- தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்திலும், அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் தமிழ்மொழியை அலுவல் மொழி ஆக்கிட வேண்டும்; மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் எல்லா நிலைக்கல்வியும் தமி்ழ்மொழி வாயிலாகவே இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தமிழ்மொழி அரியணை ஏறுவதற்கும் தொடர்ந்து பாடுபடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுக் கட்சியை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றும் குறிக்கோளோடு, பாரதிய சனதா…
