வெருளி நோய்கள் 494-498: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 489-493: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 494-498 எதிரொளிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிரொளிப்பு வெருளி.கண்ணாடி தவிர, நீர்ப்பகுதி, பளபளப்பான பகுதி முதலிய பிறவற்றில் எதிரொளிப்பது குறித்து மிகை பேரச்சம் கொள்கின்றனர்.00 எதிர்காலம் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது எதிர்கால வெருளி.பேரிடர், நேர்ச்சி போன்றவற்றால் யாரையோ எதையோ இழந்தவர்களுக்கு எதிர்கால வெருளி மிகுதியாக வருகிறது.எதிர்காலம்பற்றிய அச்சம், நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கையின்மை போன்றவற்றால் எதிர்கால வெருளிக்கு ஆளாகின்றனர்.00 எதிர்ம எழுது பலகை(boogieboard) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எழுது பலகை வெருளி.எதிருரு ஒளிர்வுக் காட்சி முறையில் எழுதப்பெறும்…

வெருளி நோய்கள் 489-493: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 484-488: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 489-493 எட்டின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் எட்டின் கூறு வெருளி.எட்டாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு எட்டின் கூறு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00

வெருளி நோய்கள் 484-488: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 479-483 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 484-488 உமிழ்நீர் அல்லது எச்சில் துப்புவது குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் எச்சில் வெருளி.தங்கள் மீது பிறர் எச்சில் படுவதால் மட்டுமல்ல, தங்கள் எச்சில் வடிந்து தங்கள்மேல் பட்டாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.வாயிலிருக்கும் உமிழ்நீர் தானாக வெளியேறும் பொழுது எச்சில் வடிதலாகவும் நாமாக வெளியேற்றும் பொழுது எச்சில் துப்புவதாகவும் அமைந்து விடுகிறது.பயணங்களில் அடுத்தவர் மீது விழும் வகையில் எச்சில் வடியத் தூங்குபவர் உள்ளனர். எனவே, அடுத்து இருப்பவர் பேரச்சத்திற்கு ஆளாகிறார். எனினும் இது துயில்எச்சில் வெருளி(aquadormophobia)…

வெருளி நோய்கள் 479-483: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 476-478 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 479-483 எகல் என்பவர் கோட்பாடு குறித்த வெறுப்பும் பேரச்சமும் கொள்வதே எகலிய வெருளி.கியோர்கு வில்ஃகெம் பிரீட்ரிக்கு எகல் (Georg Wilhelm Friedrich Hegel)(1770 – 1831) என்பவர் புகழ்மிக்க இடாய்ச்சு நாட்டு (செருமனிய) மெய்யியல் அறிஞர் ஆவார். இவரது கருத்துகளுக்கு ஆதரவு இருந்தது போல் சிலர் காரணமற்ற மிகை பேரச்சமும் கொண்டிருந்தனர்.00 எகித்து (Egypt), எகித்து மக்கள், எகித்து தொடர்பானவை மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் எகித்து வெருளி.எகித்திய வெருளி பல்வேறு வகைகளில் வெளிப்படும். குறிப்பாக…

வெருளி நோய்கள் 476-478 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 471-475 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 476-478 பல்லி, பாம்பு முதலான ஊர்வனமீதான அச்சமே ஊர்வன வெருளி.விலங்கு வெருளி, சிலந்தி வெருளி போன்றதே இதுவும். ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பார்கள். இயல்பிலேயே அச்ச உணர்வு உள்ளவர்களுக்குப் பாம்பு முதலான ஊர்வன மீது பேரச்சம் வருவது இயற்கைதானே.பாம்பை அடித்துவிட்டு அது தப்பித்துச் சென்று விட்டால் மீண்டும வந்து பழிவாங்கும்; ஒரு பாம்பைக் கொன்றால் அதன் துணை நம்மைத் தேடி வந்து கொல்லும்; கொம்பேறி மூக்கன் என்னும் பாம்பு கொத்திய பிறகு மரத்தில்…

வெருளி நோய்கள் 471-475 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 466-470 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 471-475 ஊர்தி விற்பவர் தொடர்பாக (வாங்குநருக்கு) ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் ஊர்தி விற்பனையாளர் வெருளி.ஊர்தி விற்பவர் ஊர்தி விற்பவர் தவறான அல்லது பொய்யான அல்லது மிகையான தகவல்களைக் கூறி ஏமாற்றுவார், அவரை நம்பி எங்ஙனம் ஊர்தியை வாங்குவது எனப் பேரச்சம் கொள்கின்றனர்.00 ஊர்திகள் தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் ஊர்தி வெருளி.amaxa or hamaxa, ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு வண்டி எனப் பொருள்.00 ஊர்திக் கொட்டில் கழுவிடம் (garage sink ) குறித்த வரம்பற்ற…

வெருளி நோய்கள் 466 – 470 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 461 – 465 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 466 – 470 466. ஊக்கிசை வெருளி – Zorevophobia ஊக்கிசை (Jazz Music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஊக்கிசை வெருளி.முதலில் அகராதிப் பொருள் அடிப்படையில் ஆரவார இசை எனக் குறிப்பிட்டிருந்தேன். இயாசு / jazz என்பதன் மூலப் பொருள் ஊக்கம் என்பதாகும். எனவே, ஊக்குவிக்கும் இவ்விசையை ஊக்கிசை எனக் குறித்துள்ளேன்.00 ஊஞ்சல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊஞ்சல் வெருளி.ஊஞ்சல் ஆடும் பொழுது கீழே விழ நேரிடலாம், ஊஞ்சல் சுற்றிக் கொள்வதால்…

வெருளி நோய்கள் 461 – 465 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 456 – 460 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 461 – 465 உறைபனி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உறைபனி வெருளிசிலர் பனிக்கட்டி தொடர்பான பனிச்சறுக்கு விளையாட்டு போன்றவற்றில் மரணப் பயத்தைச் சந்திருக்கலாம் அல்லது பனிச் சூழல் காரணமாகச் சாலை வழுக்கல் போன்றவற்றால் ஊர்தி நேர்ச்சி(விபத்து) நேர்ந்திருக்கலாம் அல்லது பனி தொடர்பான நோய்களோ இன்னல்களோ பிறருக்கு வந்ததைக் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது கதைகளில் படித்தோ திரைக்காட்சிகளில் பார்த்தோ இருக்கலாம். இதனால் அளவு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுள் பலர் பனிபாலேட்டைக்கூட(ice cream) உட் கொள்ள…

வெருளி நோய்கள் 456 – 460 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 451 – 455 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 456 – 460 456. உள்ளாடை வெருளி – Esorouchaphobia உள்ளாடை குறித்த வரம்பற்ற பேரச்சம் உள்ளாடை வெருளி.உள்ளாடைகளைக் கடைகளில் கேட்பதற்கு அணிவதற்கு மாற்றுவதற்கு எனப் பல நிலைகளில் உள்ளாடைகள் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். உள்ளாடைகள் மூலம் நோய் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.Esoroucha என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உள்ளாடை என்று பொருள்.அழுக்கு உள்ளாடை வெருளி(snickophobia) உள்ளவர்களுக்கு உள்ளாடை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.அமெரிக்க அதிபர் கிளிண்டன், தன் செயலர்…

வெருளி நோய்கள் 451 – 455 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 446 – 450 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 451 – 455 மன உலைச்சல்(anxiety) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உலைச்சல் வெருளி. உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உலைச்சல் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.மன உளைச்சலானது சுற்றுச்சூழல், தனிப்பட்ட காரணிகள், குடும்பச் சிக்கல்கள், நிதிச் சிக்கல்கள், வேலையில் அதிக அழுத்தம், குமுகப் புறக்கணிப்பு, தனிப்பட்ட துயரங்கள், சோர்வு போன்ற காரணங்களால் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர். பதற்றம் கொள்கின்றனர். அளவுகடந்தபதற்றமும் மன உலைச்சலும் மன நோய் வரவும் காரணமாகின்றன.00 உழுவை(Tractor) தொடர்பான மிகையான…

வெருளி நோய்கள் 431-435 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 426-430 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 431-435 உயிரிய மணிப்பொறி (biological clock) தொடர்பான அளவுகடந்த கவலையும் பேரச்சமும் உயிரிய மணிப்பொறி வெருளி00 432. உயிருடன் அடக்க வெருளி-Subterraneapremortephobia உயிருடன் அடக்கம் செய்யப்படுவோமோ என்ற பெருங்கவலையும் பேரச்சமும் உயிருடன் அடக்க வெருளி.இதை முதலில் உயிருடன் புதைதல் வெருளி எனக் குறித்திருந்தேன். ஆனால் புதைவு வெருளி எனத் தனியாகக் குறித்துள்ளதால் இவ்விரண்டிற்கும் குழப்பம் வரக்கூடாது என்றே உயிருடன் அடக்கம் வெருளி என இப்போது குறித்துள்ளேன்.Subterranea நிலத்தடி எனப் பொருள்; premorte என்றால் இறப்பிற்கு முன்…

வெருளி நோய்கள் 426-430 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 421-425 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 426-430 உயரம் அல்லது உயரமான இடங்களை அண்ணாந்து பார்ப்பதால் ஏற்படும் பேரச்சம் அண்ணாத்தல் வெருளி.உயரமான இடங்களை அண்ணாந்து பார்க்கும் பொழுது தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் வரலாம் எனப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். hyps என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம். இதனை முதல் பதிப்பில் உயர வெருளி(Hypsiphobia) எனத் தனியாகக் குறித்திருந்தேன். என்றாலும் உயரம் குறித்த பேரச்சம் உயர்வு வெருளி எனத் தனியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, மேல் நோக்கி அண்ணாந்து பார்ப்பது குறித்த…