வெருளி நோய்கள் 584-588: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 579-583: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 584-588 585. ஓநாயன் வெருளி – Lupophobia / lycophobia/ Lukophobia ஓநாய்/ஓநாய்மனிதன்/ஓநாயன் (werewolf)பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் ஓநாயன் வெருளி. ஓநாய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில்தான் சேர்த்துள்ளனர். ஓநாய்போன்ற மனிதன் எனவே, ஓநாயன் எனப்படுகிறான். lupus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் lykos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருளும் ஓநாய். 00 586. ஓமர் வெருளி – Homerphobia புனைவுரு ஓமர் (Homer Simpson) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓமர் வெருளி. அமெரிக்க அசைவூட்டத்…
வெருளி நோய்கள் 579-583: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 574-578: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 579-583 579. ஓக்கலகோமா வெருளி- Oklahomaphobia ஓக்கலகோமா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓக்கலகோமா வெருளி. ஓக்கலகோமா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவதாக 1907 இல் இணைந்த மாநிலம். இதன் தலைநகரம் ஓக்கலகோமா நகரம். 00 580. ஓங்கில் வெருளி – Phocodelfiniphobia / Delfiniphobia ஓங்கில் /கடற்பன்றி(dolphin)பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஓங்கில் வெருளி. ஓங்கில் / கடற்பன்றி என்பது திமிங்கில இனத்தைச் சேர்ந்தது. Dolphin/தால்பின் என்பதைத் தமிழில் கடற்பன்றி என்றும் கூறுகின்றனர். கடற்பன்றி…
வெருளி நோய்கள் 574-578: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 569-573: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 574-578 574. ஒறுப்பு வெருளி- Rhabdophobia/ Rhobdophobia/ Mastigophobia/Poinephobia தண்டனை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒறுப்பு வெருளி. குறைகூறப்படுவோம், தண்டிக்கப்படுவோம், கழி, கம்பு, தடி, கம்பி, கோல், மந்திரக்கோல் போன்றவற்றால் அடிக்கப்படுவோம் என்றெல்லாம் காரணமின்றி அச்சம் கொள்வர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு தண்டனை பற்றிய பேரச்சம் கொள்வோர் உள்ளனர். பெரும் பெருங் குற்றங்கள் புரிந்து விட்டுச் செல்வாக்கால் தப்பித்து விட்டு அச்சம் இன்றி இருப்போரும் உள்ளனர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல்…
வெருளி நோய்கள் 569-573: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 564-568: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 569-573 569. ஒளி வீச்சு வெருளி – Selaphobia ஒளி வீச்சு குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளி வீச்சு வெருளி. கால் கை வலிப்பு உள்ளவர்களும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களும் பெரிதும் ஒளி வெருளி உள்ளவர்களாக உள்ளனர். இத்தகையோர் இரவில் வெளியே செல்வதையும் இரவு மன்றங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். selas என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ஒளி எனப் பொருள். காண்க: ஒளி வெருளி (Photophobia) 00 570. ஒளி வெருளி-Photo Phobia வெளிச்சம் கண்டு ஏற்படும்…
வெருளி நோய்கள் 564-568: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 559-563: இலக்குவனார் திருவள்ளுவன்) 564. ஒவ்வாமை குறுமி வெருளி – Erisphobia ஒவ்வாமை குறுமி(dwarf planet Eris) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒவ்வாமை குறுமி வெருளி. dwarf என அழைக்கப்படுவதை உயர்திணை போல குள்ளன் என்பது தவறு. dwarf planet என்பதைக் குறுங்கோள் >குறுமி எனச்சொல்ல வேண்டும். 00 565. ஒவ்வாமை வெருளி-Anaphylaxophobia /Allergiphobia ஒவ்வாமை(Allergy) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒவ்வாமை வெருளி. உணவு ஒவ்வாமை, பயன்பாட்டுப் பொருள் ஒவ்வாமை, வளர்ப்பு விலங்குகள் அல்லது பறவைகள் ஒவ்வாமை போன்ற பல ஒவ்வாமைகள்…
வெருளி நோய்கள் 559-563: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 554-558 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 559-563 559. ஒலிப்பிக் கடிகார வெருளி – Xypnitiriphobia மணிஒலிப்பிக் கடிகாரம்(alarm clock) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிப்பிக் கடிகார வெருளி. விழிப்பிற்காக மணியை ஒலிக்கச்செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குரிய மணிப்பொறி, ஒலிப்பிக் கடிகாரம் ஆகும். 00 560. ஒலிம்பிய வெருளி – Olympicphobia ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிம்பிய வெருளி. பேரார்வமும் விடாமுயற்சியும் அளவற்ற நம்பிக்கையும் இருப்பினும் மறுபுறம் வாகைசூட இயலுமா என்ற கவலையும் சேர்வதால் ஒலிம்பிக்குப் போட்டிகளில் பங்கேற்பதில் பேரச்சம்…
வெருளி நோய்கள் 554-558: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 549-553: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 554-558 554. ஒருக்க வெருளி – Tongyiphobia ஒருக்கம்(sameness) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒருக்க வெருளி. நம்மிடம் இருக்கும் ஆடை/நகை/பொருள்போன்ற ஒன்றைப் பிறர் வாங்கித் தருதல், நம்மிடம் இருப்பதுபோன்ற ஒன்றைப் பிறர் அல்லது பிறரிடம் இருப்பதுபோன்ற ஒன்றை நமக்கு வாங்குதல் போன்ற சூழல்களில் காரணமற்ற தேவையற்ற வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர். நம் பிள்ளைகள்போல் பிறர் பிள்ளைகளும் படிப்பிலோ விளையாட்டிலோ ஒத்து இருந்தாலும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். ஒருக்கம்(sameness) = ஒரேபடித்தான நிலை/ஒரே தன்மை /ஒத்த தன்மை….
வெருளி நோய்கள் 549-553: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 544-548 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 549-553 549. ஒட்டகச் சிவிங்கி வெருளி – Kamilopardaliphobia/ Giraffeophobia(21) ஒட்டகச்சிவிங்கி குறித்த அளவுகடந்த பேரச்சம் ஒட்டகச்சிவிங்கி வெருளி. kயmēlos என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு ஒட்டகம் என்று பொருள். Kamilopardali என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஒட்டகச்சிவிங்கி. விலங்கு வெருளி உள்ளவர்களுக்கு ஒட்டகச் சிவிங்கி வெருளி வர வாய்ப்புள்ளது. 00 550. ஒட்டி வெருளி – Pittakionophobia / Stickerphobia ஒட்டி(Sticker) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒட்டி வெருளி. ஒட்டி வெருளிக்கு ஆளானோர் கணிசமான எண்ணிக்கையில்…
வெருளி நோய்கள் 544-548: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 539-543: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி) வெருளி நோய்கள் 544-548 544. ஐரிய வெருளி – Hibernophobia ஐரிய மக்கள் தொடர்பானவை மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஐரிய வெருளி. அயர்லாந்து நாட்டினரிடம், அவர்களது ஐரிய மொழியிடம், அவர்களின் அடக்குமுறைப்போக்கு, வேறுபாட்டுணர்வு முதலானவற்றிடம், கலை, பண்பாடு, நாகரிகம் முதலானற்றிடம் ஏற்படும் மிகை வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் கொண்டிருப்பர். 1863 இல் காதரீன் ஓ நெயில்(Kathleen o’neil) என்பவர் உதவி தேவை – ஐரியர் யாரும் விண்ணப்பிக்க வேண்டா (Help wanted – no…
வெருளி நோய்கள் 539-543: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 534-538: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 539-543 539. ஐசுலாந்து வெருளி-Islandophobia ஐசுலாந்து(Island) தொடர்பானவற்றில் காரணமின்றிப் பேரச்சம் கொள்வதே ஐசுலாந்து வெருளி. ஐசுலாந்து நாடு, ஐசுலாந்து மக்கள், அவர்களின் நாகரிகம், பண்பாடு, பொழுதுபோக்கு முதலியன என ஐசுலாந்து தொடர்பானவற்றில் காரணமின்றி வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர். 00 540. ஐந்தாய ஆட்ட வெருளி -Yahtziphobia ஐந்தாய ஆட்டம்(the game Yahtzee) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஐந்தாய ஆட்ட வெருளி. ஐந்து ஆயம்(தாயக்கட்டை/கவறு//பகடைக்காய்) கொண்டு விளையாடும் ஆட்டம் ஐந்துஆய>ஐந்தாய ஆட்டம். 00 541. ஐந்தாம் எண்…
வெருளி நோய்கள் 534-538: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 529-533: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 534-538 ஏளனமாகப்(Ridicule) பேசப்படுவது குறித்த பேரச்சம் ஏளன வெருளி.பொதுவிடங்களில் ஏளனமாகப் பேசப்படுவோம் என்று அஞ்சுதல்; இதனால் தரம் தாழ்த்தப்பட்டதாக வருந்துதல்; தன் மதிப்பு குறைவதாகப் பேரச்சம் கொள்ளல்; கேலிப்பொருள் ஆக்கப்பட்டதாக வருந்துதல் ஆகியன இத்தகையோருக்கு ஏற்படும்.தலைக்குனிவிற்கு ஆளாவோம் என்ற அச்சம், தாழ்வு மனப்பான்மை, தன்மதிப்புக் குறைப்பிற்கு ஆளாவோம் என்ற கவலை போன்ற வற்றால் கேலி செய்யப்பட்டாலும் கேலி செய்யப்படுவோம் என எண்ணினாலும் இப்பேரச்சம் வருகிறது.தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், தங்களைப் பிறர் ஏளனமாக எண்ணுவதாகக் கருதி ஏளன…
வெருளி அறிவியல் 499-503 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 494-498: தொடர்ச்சி) வெருளி அறிவியல் 499-503 எபிரேயர்/(இ)யூதர்கள்(Jews) மீதும் இவர்கள் தொடர்பானவை மீதும் ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் எபிரேயர் வெருளி.எபிரேய இனத்தைச் சேர்ந்த (இ)யூதம் என்னும் சமயத்தைப் பின்பற்றும் இவர்கள் மீது ஈவிரக்கமற்றவர்கள், அளவுகடந்து சூழ்ச்சி செய்து ஏமாற்றுபவர்கள், எவரையும் எளிதில் நம்பாதவர்கள் என்றெல்லாம் எண்ணுபவர்கள், இவர்கள் மீது வெறுப்பும் அச்சமும் கொள்கின்றனர்.1096இல் நடைபெற்ற முதலாம் சிலுவைப் போர், 1290இல் பிரித்தானியாவிலிருந்து எபிரேயர் /(இ)யூதர்கள் வெளியேற்றப் பட்டமை, 1391 இல் எசுபானியாவில் எபிரேயர் / (இ)யூதப் படுகொலை நிகழ்ந்தது, 1492இல் எசுபானியாவிலிருந்து…
