(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 71-73-தொடர்ச்சி) 74. மரக்கவிப் புலவர் சென்ற நூற்றாண்டிலே மரக்கவிப்புலவர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் எதனைப் பாடினாலும் மரத்தை வைத்துப் பாடுவது வழக்கம். – – ஒருமுறை, மன்னர் ஒருவரைப் பார்த்துப் பாடிப் பரிசில் பெற எண்ணிச் சென்றார். அப்போது மன்னர் அங்கு இல்லை. வேட்டைக்குப் போயிருந்தார். மன்னர் திரும்பி வரும்வரை காத்திருந்த புலவர், அவர் வந்த பின்பு தாம் இயற்றிய கவிதையைப் பாடினார். ‘மரமது மரத்திலேறி மரமதைத் தோளில்வைத்துமரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக்குத்திமரமது வழியே…