(வெருளி நோய்கள் 151 -155 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 156 -160 156. அடுப்பு வெருளி – Kouziphobia   அடுப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அடுப்பு வெருளி. அடுப்புத் துளைகள் பால் பொங்கி வடிதல் போன்றவற்றால் அடைபட்டுக்கொண்டு எரி வளி சீராக வராமல் இடையூறுகள் எற்படும், தீ நேர்ச்சி(தீ விபத்து) ஏற்படும், தீ அளவைக் குறைக்கவும் கூட்டவும் உள்ள இயக்கி நல்ல முறையில் இயங்காமல் தொல்லை கொடுப்பதால் ஏற்படும் தீங்குகள் முதலியன பற்றிய தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். எரிவளி அடுப்பு என்று இல்லை….