(தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் நூற்சிறப்பு தொல்காப்பியச் சிறப்பு தொல்காப்பியம், பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழ்வது என்றும் தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் என்றும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பாராட்டுகிறார்.  “பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது. தொல்காப்பியரும் முன்னோர் வழித் தம் நூலான தொல்காப்பியத்தில் பொருள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பேராசிரியர் க. அன்பழகனார் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13) பின்வருமாறு கூறுகிறார்:- “மேலும்,…