வெருளி நோய்கள் 166 -170 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 161-165 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 166 -170 166. அணுக்குண்டு வெருளி – Atomosophobia அணுக்குண்டுதொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சமே அணுக்குண்டு வெருளி. போர்க்கொலை நாடுகளில் இது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. சான்றாகத் தமிழ் ஈழத்தில் மக்களைக் காக்கவேண்டிய அரசே எமனாகமாறி நொடி தோறும் வேதியல் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் பிற குண்டுகளையும் போட்டு அழித்து வந்ததால் மக்களில் பெரும்பாலோர் குறிப்பாகப் பள்ளிச்சிறுவர்களும் பிற சிறுவர்களும் பெண்களும் அணுக்குண்டு வெருளியால் பாதிக்கப்பட்டு மனநோயராக இருக்கின்றனர். அணுஆயுத வெருளி (Nucleomituphobia) யைச்…
