(வெருளி நோய்கள் 171 -175 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 176 -180 176. அதிர்ச்சி வெருளி-Hormephobia துயரச் செய்தி அல்லது கெட்ட செய்தி வரும் என்றோ வந்தபின்போ தேவையற்ற பேரச்சம் கொள்வது அதிர்ச்சி வெருளி.காரணமின்றியே மின் அதிர்ச்சி ஏற்படும் என்று தேவையற்று அச்சம் கொள்வதையும் அதிர்ச்சி வெருளியில் சேர்க்கின்றனர். அதனை மின்வெருளி(Electrophobia)யில் சேர்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.தேர்வில் அல்லது தேர்தலில் தோல்வி அல்லது தொழில் முயற்சியில் தோல்வி என்னும் அதிர்ச்சி செய்தி கேட்பதாலோ இதனால் வாழ்வே இருண்டுபோவதாக அஞ்சுவதாலோ எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஏற்பட்டு…