கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர், அன்றே சொன்னார்கள்35, இலக்குவனார் திருவள்ளுவன்
(வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் – தொடர்ச்சி) கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர் சூரியன் அல்லது ஞாயிறு ஒரு விண்மீனே! சூரியனின் கிரேக்கப் பெயர் அப்பல்லோ என்பதாகும். கிரேக்கத் தொன்மக் கதையின்படி லெட்டோ (Leto)வின் உறவால் சீயசு (Zeus) தாய் ஆகிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள இடம் தேடி அலைந்து இறுதியில் கிரேக்கத்தில் உள்ள தீவில் (தெலோசு : Delos) அப்பல்லோவைப் பெற்றெடுக்கிறாள். சப்பான், சிரியன் முதலான சில நாடுகளில் சூரியன் பெண் கடவுளாகக் கருதப்படுகிறது. சூரியக் கடவுளின் பெயர் சப்பானில் அமத்தெரசு (Amaterasu)…
