(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 56-58-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்  நூறு ரு. அரசு – அரசியல்59. யார் தவறு? படிப்பறிவில்லாதவர் சட்டசபைத் தேர்தலில் நின்றார். வெற்றி பெற்றார். மந்திரியாகவும் ஆனார். அந்த ஊர்ப் பொதுமக்கள் மிகவும் மகிழ்ந்தனர் தங்கள் பள்ளிக்கூடக் கட்டடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்தார்கள். அவரும் இசைந்துவிட்டார். ஆனால் அங்கே என்ன பேசுவது என்பது தெரியவில்லை. தன் செயலரைக் கூப்பிட்டார்; பேசவேண்டிய பேச்சு – கேட்டுத் தெரிந்துகொண்டார். திறப்பு விழா மண்டபத்தே – “இது ஒரு நல்ல பணி; இது போன்ற…