நாலடி நல்கும் நன்னெறி 13: நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 13: நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். (நாலடியார், அறத்துப்பால், 3. யாக்கை நிலையாமை, பாடல் எண் 26) பாடலின் பிரித்து எழுதிய வடிவம் : நார்த் தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து அடக்கில் என்? பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்?…
பாரதி கலைக்கழகத்தின் இலக்கியச்சங்கமம்
கவிமாமணி புதுவயல் ந.செல்லப்பன் 90ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் ஆவணி 12. 2047 / ஆகத்து 28, 2016 காலை 9.00 திருவள்ளுவர் இலக்கிய மன்றம் ஆதம்பாக்கம் திருக்குறள் அறத்துப்பால் முற்றோதல் உரையரங்கம் கவியரங்கம் முனைவர் கோ.மோகனராசு முனைவர் குமரிச்செழியன்
தாய்மை மலர்ந்தால் இறைமை கனியும் – திரு.வி.க.
தாய்மை மலர்ந்தால் இறைமை கனியும் பெண்மணியின் வாழ்விலே மூன்று நிலைகள் முறை முறையே அரும்பி மலர்ந்து கனிதல் வேண்டும். அவை பெண்மை, தாய்மை, இறைமை என்பன. இம்மூன்றினுள் மிகச் சிறந்தது தாய்மை. பெண்மை, தாய்மை மலர்ச்சிக்கென ஏற்பட்டது. தாய்மை மலர்ந்தால் இறைமை தானே கனியும். இறைமை கனிவுக்குத் தாய்மை இன்றியமையாதது. தாய்மை மலராவிடத்தில் இறைமை கனியாது. தாய்மை மலராத பெண்மையும் சிறப்புடையதன்று. ஆதலின் தாய்மை சிறந்ததென்க. தாய்மையாவது அன்பின் நிறைவு! அன்பின் விளைவு! அன்பின் வண்ணம்! தமிழ்த்தென்றல் திரு.வி.க.: திருக்குறள் விரிவுரை: அறத்துப்பால்:…