சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! –தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 12 அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” – புறநானூறு 55, 10. திணை : பாடாண்திணை துறை : செவியறிவுறூஉ பாடியோர் : மதுரை மருதன் இளநாகனார் பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் (இம்மன்னன் குறித்துச் சங்கப்புலவர்கள் பொன்னுரை – 2 இல் குறித்துள்ளோம்.) கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள். அரசியலாட்சி என்றும் பொருள். ஆனால் அரசின் கொற்றம் என வருவதால் இங்கே அது…
திருவள்ளுவர் கூறும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் – தமிழண்ணல்
திருவள்ளுவர் கூறும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் திருவள்ளுவர் தனிமனித முன்னேற்றமே பெரிதும் சமுதாய முன்னேற்றம் என்று கருதுகிறார். அதனால், பெரும்பாலான குறள்கள் தனி மனிதனை நோக்கியன எனக் கருத இடந்தருகின்றன. ஒவ்வொரு மனிதன் பக்கத்திலும் நின்று தாயாய், தந்தையாய், அண்ணனாய், ஆசானாய், அறநெறி காட்டுகிறார். அவனவன் நிலைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் தட்டிக் கொடுத்து “முயல்க முன்னேறுக’ என அவர் கூறும் நெறிமுறைகள் உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்ச்செம்மல் தமிழண்ணல்: வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம்