இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23 இன் தொடர்ச்சி) 24 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24 தமிழகக் குடியரசு   அமெரிக்க நாட்டின் ஆட்சித் தலைவராக விளங்கும் குடியரசுத் தலைவர் நம் அண்ணாவைக் காண வரவில்லை. அவர்தம் அன்புச் செயல்களில் கலந்து கொள்ளவில்லை. காரணம் தமிழகம் தனிக்குடியரசாய் விளங்கி தனது அறிவு நிரம்பிய தலைவரை அனுப்பி வைக்கவில்லையே. அந்நாள் விரைவில் தேடிவருமாக என்கிறார் கவிஞர். சப்பானியச் செலவு   உழைப்பால் உயர்ந்த நாடு சப்பான், ஓங்கிய பெருமை உடைய நாடு…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22 தொடர்ச்சி) 23 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23   அண்ணாவின் சிறப்பு   அறிவுடைய ஒருவரை அயல்நாட்டவரும் மதித்துப் போற்றுவர் என் பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும். கற்போர்க்குச் சென்ற இடமொல்லாம் சிறப்பு என்னும் முதுமொழி உண்மையான்றோ? ஞாயிற்றின் ஒளியை மறைப்பவர் இஞ்ஞாலத்தில் எவரும் உண்டோ? இலர் என்று கூறலாம். ‘           அறிவுடை ஒருவரை அயலரும் போற்றுவர்             ஞாயிறு தன்னை நற்குடை மறைக்குமோ’ 58 ஐந்து நாட்கள் அன்புமிக்க தோழராய் விளங்கினார்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21 தொடர்ச்சி) 22 அமெரிக்காவின் அழைப்பு   இன்றைய உலகில் எங்கு நோக்கினும் போட்டியும் பூசலுமே நிலவுகின்றன. இவை நாட்டைத் துன்புறுத்தும் கேடான செய்திகளாம். அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சித் திறத்தால் நம்முடைய இனிய தமிழ்நாட்டில் அமைதியும் ஒழுங்கும் குடிகொண்டு விளங்குகின்றது. இந்நிலவுலகத்தின் இதனை அறிந்த மக்கள் ஒவ்வொருவரும் தம்முடைய நாட்டில் தலைவர் அண்ணா அவர்கள் காட்சி தர வேண்டும். களிப்பினை நல்க வேண்டும் என்றே விரும்பினர். அனைவரும் அழைக்க எண்ணுகையில் எதிலும் முன்றிற்கும் செல்வச் சிறப்புடைய…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21: ம. இராமச்சந்திரன்

  (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20 தொடர்ச்சி)  21    குற்றமற்ற அறநெறியாம் மக்களாட்சி நெறி முறையைப் பின்பற்றிக் மிகப்பெரிய இயக்கமாகத் திராவிட முனனேற்ற கழகத்தை அமைத்து மக்களைக் கவர்ந்தார். மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் 6.3.1967 ஆம் நாளன்று தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணையில் அமர்ந்தார். பேச்சுத் திறன் கொண்டு மக்கள் உள்ளம் கவர்ந்து தலைவரானார். இத் தரணியில் இவர் போல் வேறு எவரேனும் உண்டோ? சொல்வீர்.  இதனை, சொல்லுந்திறன் கொண்டே தோமில் நெறியில் மக்களைக் கவர்ந்த மாபே ரியக்கம் அமைத்து முதல்வராய்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி)     இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை.  தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி…