அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 53-55
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 50-52-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 53. மாப்பிள்ளை தேடுதல்! முப்பது வயதான தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் புறப்பட்ட ஒர் அந்தணனுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள் அவன் மனைவி. நடையாய் நடந்து, அலைந்து அலுத்துப்போய், ஒரு வீட்டுத் திண்ணையிலே அந்தணன் தங்கியபோது, தன் கவலையையெல்லாம் அந்த வீட்டுக்காரனிடம் சொன்னான். அது கேட்ட அவன், “எனக்கு ஒரு மகன் இருக்கிறான். வயது 32 ஆகிறது. வரதட்சணை எல்லாம் வேண்டா. உன் பெண்ணை அவனுக்கு மண முடிக்கலாம்” என்றான். அவனும்…
