அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 56-58 – சமூகம்
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 53-55-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 56. மூத்த மாப்பிள்ளை ஒரு சமயம் நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் தன் அருகில் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “இவர்தான் எங்கள் வீட்டு முதல் மாப்பிள்ளை. பெரிய மாப்பிள்ளையும் கூட. இவர் மிகவும் நல்லவர். ஏனெனில் எங்கள் குடும்பத்துக்குப் பெரிய உதவி செய்துள்ளார். இதற்காக எங்கள் குடும்பமே இவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது” என்று முகமலர்ச்சியுடன் கூறினார். நான் வியப்படைந்து, அப்படிப்பட்ட உதவி இவர் என்ன செய்தார்?”…
அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 53-55
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 50-52-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 53. மாப்பிள்ளை தேடுதல்! முப்பது வயதான தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் புறப்பட்ட ஒர் அந்தணனுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள் அவன் மனைவி. நடையாய் நடந்து, அலைந்து அலுத்துப்போய், ஒரு வீட்டுத் திண்ணையிலே அந்தணன் தங்கியபோது, தன் கவலையையெல்லாம் அந்த வீட்டுக்காரனிடம் சொன்னான். அது கேட்ட அவன், “எனக்கு ஒரு மகன் இருக்கிறான். வயது 32 ஆகிறது. வரதட்சணை எல்லாம் வேண்டா. உன் பெண்ணை அவனுக்கு மண முடிக்கலாம்” என்றான். அவனும்…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 50-52
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 47-49-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 50. வேலை வாங்கும் முதலாளி தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி. ஒரு சமயம், அவர் தன் வேலையாள் ஒருவனை அழைத்து, ‘நான் சொல்வதை மட்டும் நீ செய்தால் போதும். மற்றதைச் செய்யாதே’ என்று கண்டிப்பாய்ச் சொல்லி அனுப்பினார். அன்று மாலை குழாயிலிருந்து குடிநீர் கொண்டுவரக் குடத்தை கொடுத்து அனுப்பினார். “குடத்தை நன்றாக விளக்கி, உள்ளேயும் கை போட்டு நன்றாகக்…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 47-49
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 44-46-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 47. சவாரிக் குதிரை இங்கிலாந்தை ஆண்ட மகாராணி விக்குடோரியாவுக்கு ஒரு நாள் ஒர் ஆசை – தன் பேரனைத் (ஐந்தாம் சியார்சு) தூக்கி மகிழவேண்டும் என்பது. அதைப் பிறர் யாரேனும் பார்க்கப்படாதே என்ற அச்சம் வேறு இருந்தது. என் செய்வார்? சிறு குழந்தையைத் தூக்க ஆசை. மகாராணியாயிற்றே! யாரும் இல்லாத நேரம், ஒரு நாள் தான் பேரனைத் தன் தலைக்கு மேல்தூக்கி வைத்துக் கொஞ்சத் தொடங்கினார். இதனை, அந்த அரண்மனை ஆள் எங்கிருந்தோ…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 44-46
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 44. செட்டியாரும் காகமும் செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம். மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது. நரி – “காக்கா காக்கா – உன் குரல் எவ்வளவு அழகாக – இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது. காகம் அதை நம்பி, வாய்திறந்து – கா கா என்றது. உடனே மூக்கிலிருந்த வடை விழவே – அதை நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது….
அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43: குடும்பம்
(அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்நூறு 3. குடும்பம்41. திருமண வீடு ஒரு வீட்டிலே திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டி ஒரமாக நின்ற வேலைக்காரனை அங்கு வந்த அவனது நண்பன் அழைத்தான். ‘இங்கே எப்படி உன் வேலை?’ என்று கேட்டான். அதற்கு வேலைக்காரன், “சாதாரண நாளிலேயே இந்த வீட்டு வேலை இழவு வீட்டு வேலை மாதிரி இருக்கும். இப்ப கலியாண வீட்டு வேலை. பேரிழலாய் இருப்பதற்குக் கேட்பானேன்” – என்றான். “திருமண வீட்டிலே இழவு, பேரிழவு என்று பேசலாமா” என்று நண்பன்…
அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40
(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 36-38-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 39. முதலாளிக்குத் திறமை இல்லை! பெரும் பணக்காரர் ஒருவர். தொழில் அனுபவமுள்ள ஒருவர், ஆக இருவருமாகக் கூட்டுச் சேர்ந்து நகைக்கடையைத் தொடங்கினார்கள். பத்து ஆண்டு ஒப்பந்தம்; ஆளுக்குப் பாதி இலாபம் எனக் கையெழுத்திட்டு கடை நடந்து கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் ஆயின, இதற்குள் உழைப்பாளி ஒரு வீடு கட்டிவிட்டான். நிலமும் வாங்கிவிட்டான். முதலாளிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. “ஏதோ தவறு செய்கிறான்’ என்று சிலர் சொல்லியும் முதலாளி நம்பவில்லை. காரணம் இதுதான்…
அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 36-38
(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 33-35-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 36. கிளியும் ஓநாயும் ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஓநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன : கிளி : ஓநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க? ஓநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன். கிளி : ஏன் வேறு காட்டுக்குப் போறீங்க? ஓநாய் : இந்தக் காட்டிலிருக்கிற புலியும் சிறுத்தையும் என்னைக் கண்டால் கடிக்க வருதுங்க. மானும் முயலும்…
அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 33-35
(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 30-32 – தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 33. மொட்டைத் தலைக்குச் சுங்கம் உண்டா? ஒர் ஊரிலே பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே வந்து வழிபாடு நடத்தினர். வேண்டுதலை நிறைவேற்ற மொட்டையடித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவன், தன் குடும்பத்துடன் மொட்டை அடித்துக்கொண்டு, திருவிழாவையும் கண்டுகளித்துவிட்டு ஊர் திரும்பினான். வழியிலே ஒரு சுங்கச் சாவடி. அங்குப் பலகையில் ஏதோ எழுதியிருந்தது. அருகில் அதிகாரி ஒருவனும் நின்றுகொண்டிருந்தான். இவன்…
அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 30-32
(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 27-29-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 30. மோட்சமும் நரகமும்! மாலை வேளையில் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்த தாசியொருத்தி, கீழேயிருந்த தன் வேலைக்காரியை அழைத்து, “நம் வீதி வழியே ஒரு பெரியவரின் சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நீ போய் அவரது ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா – நரகத்துக்குப் போகிறதா என்று பார்த்து வா” என்றாள். மறுநிமிடமே, அவள் திரும்பிவந்து, “அம்மா, அந்த ஆன்மா மோட்சத்துக்குப் போய்விட்டது” என்று சொன்னாள். இவற்றையெல்லாம் திண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு சந்நியாசி,…
அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் – 24-26
(அறிவுக் கதைகள் நூறு 21-23 தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 24. பேராசிரியர் தேடிய மனிதன் மேலைநாட்டுப் பேராசிரியர் ஒருவர், பட்டப் பகலில் 12 மணி உச்சி வேளையில், கையில் மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு நடைபாதையில் போவோர் வருவோரை அன்புடன் அழைத்து வாருங்கள் என்று கூறி, அவர்கள் முகத்திற்கு நேரே விளக்கைக் காட்டி நன்றாக அவர்களைப் பார்த்துவிட்டு, பிறகு அவரைப் போகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். அவர்களில் ஒருவன் வியப்படைந்து, “ஏன் ஐயா பட்டப்பகலிலே மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றிக்கொண்டு ஒவ்வொருவர் முகத்திலும் காட்டி அனுப்புகிறீர்களே, என்ன காரணம்?”…
அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 21-23
(அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 18-20- தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 21. நரியும் பூனையும் காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது. நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது. சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ஆடிக் களிப்புற்றது. மற்றொருநாள் பூனை நரியை நகரத்திற்குள் விருந்துக்கு அழைத்தது. நகரத்திற்குள் வர நரி முதலில் தயங்கினாலும், பூனை கூறிய…
