(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! –தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 12 அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!  “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”                     – புறநானூறு  55, 10. திணை :  பாடாண்திணை துறை : செவியறிவுறூஉ பாடியோர் : மதுரை மருதன் இளநாகனார் பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்  (இம்மன்னன் குறித்துச் சங்கப்புலவர்கள் பொன்னுரை – 2 இல் குறித்துள்ளோம்.) கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள். அரசியலாட்சி என்றும் பொருள். ஆனால் அரசின் கொற்றம் என வருவதால் இங்கே அது…