செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் தமிழை இழித்துரைப்பார்களா? – சி.இலக்குவனார்
செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் தமிழை இழித்துரைப்பார்களா? கல்வியும் செல்வமும் உடைய தமிழர்கள் தாமுண்டு தம்வாழ்வுண்டு என்று கூற்றுவனுக்கு நாளோட்டுகின்றனரேயன்றித் தமிழினப் பெருமையை எண்ணிச் செயலாற்றும் இயல்பைப் பெற்றிலர். அன்று வாய்வாளாண்மையின் வண்டமிழ் இகழ்ந்த வடவரை அடக்க வலிதிற் சென்ற செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் ஆரியர்கள் வரும் முன்னர் தென்னிந்தியா வளமுற்றிருந்தது என்பதற்கோ நாகரிகச் சிறப்புடன் சிறந்தது என்பதற்கோ இதுவரை சான்று கிடையாது என்று கூறுவார்களா? கி,மு,ஏழாம் நூற்றண்டினது எனக்…
ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்
ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும்பற்றித் தமிழர்களே கற்றவர் என உலகோரால் போற்றப்படும் தமிழரே நன்கு அறியாதவராய் உள்ளனர். ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இமயம் முதல் குமரி வரை இனிதே வாழ்ந்த தமிழர்கள் ஆரியர்களிடமிருந்தே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றனர் என்று கூறுவது உண்மை நிலையறியாத வரலாற்று ஆசிரியர்க்கு ஒரு மரபாகிவிட்டது. மேனாட்டு வரலாற்று ஆசிரியர்களில் சிலர் நடுநிலை நின்று ஆராய்ந்து ஆரியர்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்னரே தமிழர்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும்…
ஆரியர் வருகையால் கட்டுக்கதைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களும் பெருகின! – இராகவன்
ஆரியர் வருகையால் பாரத நாட்டில் சமயச்சடங்குகள் வளர்ந்தன. தெய்வங்கள் பெருகின. புரோகிதம் வளர்ந்தது. சாத்திரங்களும், சடங்குகளும் மலிந்தன. அதனால் கலைகளும் கட்டுக்கதைகளும் வளர்ந்தன. குருட்டுப் பழக்கவழக்கங்களும், மூடநம்பிக்கைகளும், சாதிகளும், சாதிக் கட்டுப்பாடுகளும் பயனற்ற மந்திர தந்திரங்களும் பெருகின. தெய்வங்களும் அவற்றின் மனைவி மக்களும், சிறு தெய்வங்களும் பெரிய தெய்வங்களும் அவற்றின் பணியாட்களுமாக ஆயிரம் ஆயிரமாகத் தெய்வங்கள் பல்கிப் பெருக்கெடுத்தன. முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர்களின் மனைவிமக்கள் பணியாட்களுமாகக் கோடானு கோடி தெய்வங்கள் பல்கிப் பெருகின. -நுண்கலைச் செல்வர் இராகவன்: தமிழ் சங்கக் கலைத்…
ஆரியர் புகுந்ததும் தங்கியது சிந்து வெளியில் – புதையுண்ட பேரரசுகள்
