பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? –  இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19 – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 20-21 நால்வகைச் சாதியிந் நாட்டில் நீர் நாட்டினீர் மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால்  என்றும் குலமும் ஒன்றே குடியும் ஒன்றே இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே என்றும் கபிலர் அகவல் கூறுவது சனாதனத்திற்கு எதிர்ப்பாகத்தானே. எனவே, தொடர்ச்சியாகச் சனாதனம் இருப்பதாகப் பெருமை பேசுநர், தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு இருப்பதையும் உணர்ந்து அடங்கி ஒடுங்க வேண்டும். பூணூல் அணிந்த பிராமணர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதற்குக் காவல் துறையும் நீதித்துறையும் ஊடகங்களுமே சான்றாகும்….

“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்

(தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 10-13 10. “இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்.        ஆரியத்தின் வழக்கமான பொய்களுள் இதுவும் ஒன்று. படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் எனக் கருதி இதை நம்பும் தமிழறிஞர்களே இதன் அடிப்படையில் தவறான கால ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகிறார்கள். அப்படியிருக்கப் பாமரர்கள் இவற்றை நம்பாமல் எப்படி இருப்பார்கள். வால்மீகி இராமாயணத்தில் பட்டமேற்பிற்காக அயோத்திக்குத் திரும்பும் இராமன், தம்பி…

தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(எல்லாரும் சமம் என்பது சாத்தியமில்லை – சரியா?- தொடர்ச்சி) 5. இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் . . . . இந்த நிலத்தில்தான் சனாதன தருமம் உருவாகியது. இந்தத் தருமம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள்” என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருக்கிறாரே!  இது பொதுவாக ஆரியர்களின் வழக்கம். ஒன்றைப்பற்றிய தீய சக்தியை மக்கள் புரிந்து கொண்டால், அதனைச் சமாளிப்பதற்காக அதைப்பற்றிய இல்லாத நல்ல செய்திகளை இருப்பதாகப் பரப்புவர். அதுபோல்தான் இப்போதும். சனாதனத்திற்குரிய எதிர்ப்பு…