வெருளி நோய்கள் 276 – 280 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 271 – 275 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 276 – 280 276. ஆழ்பு வெருளி-Bathophobia ஆழம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் ஆழ்பு வெருளி ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் குறித்துள்ளோம். மிகவும் கீழிறக்கமான படிக்கட்டுகள்,…