(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 3 ஆரிய மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை இடைக்காலத்தில் திருஞானசம்பந்தரே ஆரியச் சடங்குகளைத் தவிர்த்துத் தமிழ் மறை ஓதிச்சடங்கு செய்து கொண்டார் அல்லவா? அவ்வாறிருக்க சங்கக்கால இறுதியில் மட்டும் ஆரியச்சடங்குகளைச் செய்திருப்பார்களா? ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம். (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும்…