பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  (மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி)     காட்சி –3 அங்கம்    :     கவிஞர், அன்பரசன், இடம்      :     கவிஞரது குடில் நிலைமை  : (கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்!                    வீரிய நெஞ்சாம்! அன்பரசன் தனக்குத்தானே குடில் முன்னே! மனக்குறையோடு உரைக்கின்றான்!) அன்ப :   காலம் உணர்ந்த கவிஞருக்கு ஞாலப்பரிசு ஒரு குடிலோ; வணக்கம் புலவரே! வணக்கம்! மனநிறைவான வணக்கம்! கவி     :  யாரது? ஓகோ! வா! வா! தம்பி அன்ப   : …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – காட்சி 2

[கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி]   காட்சி – 2 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (சிட்டுக்கள் இரண்டும் மெட்டுரையாடல்) ஆண்   :  என்ன பேடே! சிரிப்பென்ன? எனக்கும் சொல்லேன்! சிரிக்கின்றேன்! பெண் :   என்னவோ! வாழ்வை நினைத்திட்டேன்! இனிமையில் என்னையே மறந்திட்டேன்! வண்ண எண்ணங்கள் விரிந்ததனால் என்னையே மறந்து சிரித்திட்டேன்!   ஆண் :   அதுவா! உண்மை! உண்மைதான்! இதயம் குளிர்ந்த சிரிப்புத்தான்! இனிய…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்

  பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன் காட்சி – 1   அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     கூரையிலுள்ள குருவிக்கூடு நிலைமை  :     (தன்னுரையாக இரு சிட்டும் முன்னுரை இங்கே பகிர்கின்றது) ஆண் பெண் பருவ இருசிட்டு ஆழ்ந்த காதல் முடிபோட்டு வாழத்துடியாய்த் துடித்தொன்றாய் நாடி நரம்பு தளர்ந்து விட வானில் பறவைகள் பறந்ததுவே! அஞ்சிச் சிறகுகள் வழிதடுத்தும் கெஞ்சிக்கால்கள் குரல்கொடுத்தும் அலையாய், அலையாய் அலைந்துமே நிலையாய் முட்டையிட்டுவிடக் குஞ்சு பொரித்து…

தமிழே வாழ்க! – ஆ. வெ. முல்லை நிலவழகன்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்றே முழங்கிய தமிழே வாழ்க! நாடும் மொழியும் தாயயன எம்மை! வணங்கிடச் சொன்ன தமிழே வாழ்க! அன்பே தெய்வம்! அறமே கோவில்! நன்றே சொல்லிய தமிழே வாழ்க! வீரமும் அறமும் உயிரெனச் சொல்லி! நெறிமுறை வகுத்த தமிழே வாழ்க! வறுமையில் இருந்தும் விருந்திடச் சொன்ன! பண்பிற் சிறந்த தமிழே வாழ்க! தீமைகள் செய்தால் நன்மைகள் செய்தே! திருத்திடச் சொன்ன தமிழே வாழ்க! அரசுக் கட்டிலில் புலவன் துயின்றும்! மன்னவன் மகிழ்ந்த தமிழே வாழ்க! ஓளவைக்கு நெல்லிக்கனியினைக் கொடுத்து! மன்னவன்…