(வெருளி நோய்கள் 366-370 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 371-375 இறைமம்(spiritual thing)சார்பானவை குறித்த வரம்பற்ற பேரச்சம் இறைம வெருளி.இதனை ஆன்மா என்றும் ஆன்மாவைத் தமிழில் ஆதன் என்றும்உயிர் நலம்சார்ந்த என்றும் குறிப்பிடுகின்றனர். எனினும் நடைமுறையில் சமயம் சார்ந்தும் இறை நெறி சார்ந்தும் உள்ளது. எனவே, இதனை இறைமம் எனக் குறிப்பிட்டுள்ளேன்.00 இறைமை தொடர்பான வரம்பற்ற பேரச்சம் இறைமை வெருளி.இறைமை நூலைப்படிப்பதால் மட்டுமல்லாமல், இறைமை வழிபாடு, தொடர்பான நிகழ்வுகள் முதலான அனைத்திலும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.காதல் தோல்வியால்கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே…