“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்
(தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 10-13 10. “இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள். ஆரியத்தின் வழக்கமான பொய்களுள் இதுவும் ஒன்று. படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் எனக் கருதி இதை நம்பும் தமிழறிஞர்களே இதன் அடிப்படையில் தவறான கால ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகிறார்கள். அப்படியிருக்கப் பாமரர்கள் இவற்றை நம்பாமல் எப்படி இருப்பார்கள். வால்மீகி இராமாயணத்தில் பட்டமேற்பிற்காக அயோத்திக்குத் திரும்பும் இராமன், தம்பி…