மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் – இராதாகிருட்டிணன்

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும். மாநிலக்கல்வியமைச்சர் இராதாகிருட்டிணன்     இலங்கையின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எசு. இராமதாசு  சென்னையில்  ஆனி 29, 2047 / சூலை 13, 2016 அன்று காலமானார்.    இது குறித்த இரங்கல் செய்தியில் மாநிலக் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:   இலங்கையின் பழம் பெரும் நடிகரான கோமாளிகள் புகழ் மரிக்கார் எசு.இராமதாசின் மறைவு இலங்கைக் கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, திறமை, என்பன…

திருக்குறள் கழகத்தலைவர் பா.இராமையா காலமானார்

புதுக்கோட்டை திருக்குறள் கழகத்தின் தலைவர் பா.இராமையா அவர்கள் 5.2.14 புதன்கிழமை இரவு காலமானார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த நெய்வேலி என்னும் சிற்றூரில் 15.03.1935 இல் பிறந்தவர். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர் புதுக்கோட்டை இந்தியன் வங்கி மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், கல்லூரியில் பயிலும்பொழுதிலிருந்தே நல்ல தமிழுணர்வும் பகுத்தறிவும் கொண்டவராக விளங்கினார்.  திருக்குறளின் பால் தீராக்காதல் கொண்டிருந்த இவர் தனது பணிநிறைவிற்குப் பின்னர் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனரால் தொடங்கப்பட்டு இயங்கி வந்த திருக்குறள் கழத்தின் தலைவராக…