110. இராமன் ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்தது சனாதனத்தின் சிறப்பா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 பிறன் மனைவியை விரும்புவதையே அறமற்ற செயலாகக் கருதுபவர்கள் தமிழர்கள். மன்னர் அரசியிடமிருந்து விலகி வேறு பெண்ணை நாடிச் சென்ற பொழுது புலவர்கள் மன்னரையே கண்டித்துத் திருத்தியுள்ளார்கள். கணவன் இல்லாத வீட்டில் பேச்சுக் குரல் கேட்பதாக எண்ணிக் கதவைத் தட்டிய அரசன், பின்னர் உடனிருப்பது கணவன்தான் என்பதை உணர்ந்து அவன் மனைவி மீது ஐயப்படக்கூடாது என்பதற்காக எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டிச்சென்று பின்னர்த் தன் கையையே வெட்டிக்கொண்ட பொற்கைப்பாண்டியன் வாழ்ந்த…

35.வேதங்கள்பெண்களைப்போற்றுகின்றனஅல்லவா?+ 36.சனாதனத்தில் யாவரும் சமம் என்று பொய்யாகக் கூறிவருகிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 33-34-தொடர்ச்சி) ஆமாம்  இது பொய்தான். சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போம் அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் இறப்பிற்குக் காரணம் சூத்திரன் ஒருவன் தவம் மேற்கொண்டுவருவதுதான் என நாரதர் இராமரிடம் கூறினார், இராமர் அவ்வாறு தவமிருந்த சம்புகனைத் தேடிச்சென்று அவனைத் தவக்கோலத்தில் கண்டான். அக்கணமே தன் வாளால் அவன் தலை வேறு உடல் வேறாகும்படி வாளால் வெட்டிக் கொன்றான். சூத்திரன் தவமிருக்கக்கூடாது என இராமரும் நாரதருமே கூறுகையில் சாதாரண மக்கள் என்ன எண்ண மாட்டார்கள். இத்தகைய சனாதனத்தை நாம் வரவேற்பது முறையா?…

இராமன்தான் திராவிட மாதிரியின் முன்னோடி என்றால் அது நமக்குத் தேவையில்லை | இலக்குவனார் திருவள்ளுவன் 

முற்றம் தொலைக்காட்சி காணுரை இலக்குவனார் திருவள்ளுவன்  விசவனூர் வே.தளபதி நாள் ஆடி08, 2055 புதன் 24.07.2024 இராமன்தான் திராவிட மாதிரியின் முன்னோடி என்றால் அது நமக்குத் தேவையில்லை

அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்! – சுப.வீ.

அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்!  இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.).,பா. ச.க. முதலான சங்கப் பரிவாரங்களின் அடாவடித்தனமும், மிரட்டல்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. அதன் ஒரு பகுதிதான் மூத்த இ.ஆ.ப. அதிகாரி கிருத்துதாசு காந்தியின் மீது ஏவி விடப்பட்ட வன்முறை மிரட்டல்கள்.  யாருக்கோ நிகழ்ந்த ஒன்று என எண்ணி நாம் கவலையற்று இருந்தால் அது நாளைக்கு நம் ஒவ்வொருவருக்கும் நடக்கக்கூடும். எனவே கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள்  அனைத்தையும் தாண்டி,மதவாத வன்முறைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய நேரமும், நெருக்கடியும் இப்போது வந்துள்ளது.  எங்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கும், கிருத்துதாசு…

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு      காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே.      ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர்.      “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்      உயிர் செகுத்து உண்ணாமை…

சங்கத்தமிழ் வீரனின் அம்பும் இராமனின் அம்பும் – அறிஞர் அண்ணா

இதுதான் வீரமா? இந்தக் கதையை அறிவுடையதென்று ஏற்கமுடியுமா?  வில்வீரன் ஒருவன் வில்லிலே நாணேற்றி அம்பைப் பூட்டி விசையாக விடுகிறான், ஒரு புலியைக் குறி வைத்து. 1. அம்பு வில்லினின்றும் விடுபட்டு மிக வேகமாகப் புலியின் உடலை ஊடுருவிச் சென்று, அருகிலிருந்த வாழை மரத்திலே பாய்ந்து நின்று விட்டது. இந்நிகழ்ச்சி உண்மையானது. உருவகப்படுத்தியதன்று. அம்பு புலியின் உடலைத் துளைத்துச் சென்றது என்பது அம்பின் கூர்மையையும் வேகத்தையும் அதை எறிந்தோனுடைய சக்தியையும், குறி தவறாத திறமையையும் குறிக்கிறது.புலியைத் துளைத்தபின் அம்பின் வேகம் குறைகிறது. தடையேற்பட்டதால், 1. எனவே,…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ : ஓரங்க நாடகத்தின் பின்னுரை

(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல சமயங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு சமயச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்றுக் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சமயப்போரை மறுபடியும் தொடக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 5

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி ஐந்து இலவா, குசா, இராமன் முதல் சந்திப்பு இடம்: காட்டுப் போர்க்களம். நேரம்: மாலை. பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, இராமன், சீதா.துறவக மருத்துவர், சீடர்கள். அரங்க அமைப்பு: பரதன் ஏவிய ஓரம்பில் இலவாவின் கரம் காயமானது! [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா, இலவா கைக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதனைக் காயப்படுத்தி முடமாக்கினான். களங்கமற்ற சிறுவரைக் கண்டு வல்லமைமிக்க அனுமான் படையினர்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 4

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) காட்சி நான்கு அயோத்திய புரியில் தொடங்கிய அசுவமேத வேள்வி  இடம்: அயோத்திய புரி அரண்மனை நேரம்: மாலை பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிசி வசிட்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரண்டு வயதுப் பாலகர்கள்: இலவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.  [அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிடுகிறான். மகரிசி வசிட்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து வேள்விக்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத்…