பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 115 நால்வருணங்களுள் பிராமணரைத் தவிர ஏனையோரைக் கீழானவராக இறைவன் கருதுவதாகத் தெரிவிக்கும் பாடல்களும் கீதையில் உண்டு. எல்லாப் பெண்களையும் கீழ் வருணத்தார் எனவும் கீழானவர்களாகவும் இழிவாகக் கூறியுள்ள நூல் எங்ஙனம் சிறப்பாக இருக்க முடியும்?பகவத்து கீதையின் ஆணைகள் ஒரு சார்புடையவை என்பது வெளிப்படை. எல்லா உயிர்களும் ஒத்த உயர்வுடையவை என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு பகுதிகளாகப் பிரித்து அவரவர்க்குரிய தொழில்களை முறையின்றி விதி்த்துப் பெண்ணினம் முழுவதையும்…
இராமானுசர் தமிழ்ஆழ்வார் பாடல்களையே பயன்படுத்தி உள்ளார்! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 52 / 69 இன் தொடர்ச்சி)
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் : மறை. திருநாவுக்கரசு
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் மறைமலையடிகளின் நாட்குறிப்பு : 13-1-1899 : மாண்புமிகுந்த இராமானுசர் கி.பி. 986இல் பிறந்தார். விளக்கம் : இவர், வைணவ சமய ஆசிரியராவர். ‘பாஃசியகாரர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். வைணவ சித்தாந்தத்தைத் தம் பேருரைகளாலான நூல்களாலும், சொற்பொழிவுகளாலும் பாரத நாடெங்கும் பரப்பியவர். வடமொழியிற் பலவும், தமிழிற் சிலவும் ஆக நூல்களையியற்றியவர். -வித்துவான். மறை. திருநாவுக்கரசு