ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 3

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 2 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 3 சோலை சோலை என்ற சொல்லும்‌ சில ஊர்ப்‌ பெயர்களில்‌ உண்டு. மதுரையின்‌ அருகேயுள்ள அழகர்‌ கோவில்‌ பழங்காலத்தில்‌ திருமால்‌ இருஞ்சோலை என்று பெயர்‌ பெற்றிருந்தது.32 பழமுதிர்‌ சோலை  முருகப்‌ பெருமானது படைவீடுகளில்‌ ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும்‌.33 சேலம்‌ நாட்டில்‌ தலைச்சோலை என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும்‌ ஊர் உள்ளது. தோப்பு மரஞ்‌ செடிகள்‌ தொகுப்பாக வளரும்‌ இடம் தோப்பு என்று அழைக்கப்படும்‌.34  தோப்பின்‌…

ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 2

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 2 பழங்காலத்தில்‌ தமிழ்‌ நாட்டில்‌ மரம் செறிந்த காடுகள்‌ மலிந்திருந்தன. பண்டைத்‌ தமிழரசர்களாகிய கரிகால்‌ வளவன்‌ முதலியோர்‌ காடு கொன்று நாடாக்கினர்‌ என்று கூறப்படுகின்றது.19 ஆயினும்‌, அந்‌ நாளில்‌ இருந்து அழிபட்ட காடுகளின்‌ தன்மையைச்‌ சில ஊர்ப்பெயர்களால்‌, உணரலாம்‌. இக்காலத்தில்‌ பாடல்‌ பெற்ற தலங்கள்‌ என்று போற்றப்படுகின்ற ஊர்கள்‌ முற்காலத்தில்‌ பெரும்பாலும்‌ வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால்‌ அறியப்படும்‌. சிதம்பரம்‌ ஆதியில்‌ தில்லைவனம்‌; மதுரை கடம்பவனம்‌; திருநெல்வேலி வேணுவனம்‌….

ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1

(ஊரும் பேரும் – முகவுரையும் நன்றியுரையும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 1. தமிழகமும்‌ நிலமும்‌ தமிழகம் பழம்‌ பெருமை வாயந்த பாரதநாட்டின்‌ தென்பால்‌ விளங்குவது தமிழ்நாடு. சேர சோழ பாண்டியர்‌ என்னும்‌ மூவேந்தரால்‌ தமிழகம்‌ தொன்றுதொட்டு ஆளப்பட்ட தென்பர்‌. பொதுவுற தமிழகம்‌ நோக்கும்பொழுது பழந்‌ தமிழகத்தில்‌ மேல்நாடு சேரனுக்கும்‌, கீழ்நாடு சோழனுக்கும்‌, தென்னாடு பாண்டியனுக்கும்‌ உரியன வாயிருந்தன என்பது புலனாகும்‌. இங்ஙனம்‌ மூன்று கவடாய்‌ முளைத்தெழுந்த தமிழகம்‌ மூவேந்தரது ஆட்சியில்‌ தழைத்தோங்கி வளர்ந்தது.*1 நால்‌ வகைப்பட்ட நிலங்கள்‌. தமிழகத்தில்‌ அமைந்‌திருக்கக்‌ கண்டனர்‌ பண்டைத்‌ தமிழர்‌.*2…

ஊரும் பேரும் – திரு.வி.க. அவர்களின் முகவுரையும் ஆசிரியர் இரா.பி.சேது நன்றியுரையும்

தமிழகம் ஊரும் பேரும் முகவுரை உலகை ஒழுங்கு முறையில்‌ இனிது நடாத்தி வரும்‌  அமைப்புகள்‌ பலப்பல. அவற்றுள் உயிர்ப்பாய்த்‌ திகழ்வது ஒன்று. அது நூல்‌ என்பது. நூலின்‌ உள்ளுறை யாது? அறிவு. ஆதலின்‌, நூல் அமைப்பை அறிவுச்‌ சுரங்கம்‌ என்று கூறலாம்‌. நூல்கள்‌ பல திறம்‌. பல திறத்துள்‌ இரவியும் தனித்தும்‌ நிற்பது வரலாறு. வரலாறு வான்‌ போன்றது. வான்‌ மற்றப்‌ பூதங்களிற்‌ கலந்தும்‌, அவற்றைக்‌ கடந்து தனித்தும்‌ நிற்பதன்றோ? “ஊரும்‌ பேரும்‌” என்னும்‌ இந்‌ நூல்‌ வரலாற்றின்பாற்பட்டது. இவ்‌ வரலாறு தமிழ்‌ நாட்டின்‌…

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – எழில்.இளங்கோவன்

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) கவியோகி சுத்தானந்த பாரதியார் ஒருவரை இப்படிப் பாராட்டுகிறார்: “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை. தமிழின் இன்பம் நுகர வேண்டுமானால், சேதுப்பிள்ளையின் செந்தமிழைப் படிக்க வேண்டும்” யார் இந்தச் சேதுப்பிள்ளை? “தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேது(ப்பிள்ளை). சொல்மாரிச் செந்தமிழ்ச் சொற்கள் நடம் புரியும். எதுகையும் மோனையும் பண்ணிசைக்கும். சுவைதரும் கவிதைகள் மேற்கோளாகும். எடுப்பான நடையில் நின்று, நிதானித்து அவரின் சொற்பொழிவு இருக்கும்.” இப்படி அறிமுகம் செய்கிறார் சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)யை, பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். திருநெல்வேலி மாவட்டம் இராசவல்லிபுரம் என்ற ஊரில் பங்குனி 20,…

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2 : இரா.பி.சேது(ப்பிள்ளை)

[தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)(தொடர்ச்சி] தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2   இன்னும்,  இந்  நாட்டைத்  தந்தை நாடென்று   கருதும்   பொழுது,  அத்  தந்தையின் மக்களாய்ப் பிறந்த நமது   உரிமை,   மனத்தில்  முனைந்து தோன்றுவதாகும். இவ்வுரிமைக் கருத்து   உள்ளத்தைக்   கவரும்பொழுது  வீரம் கிளம்புகின்றது. தாயை அன்பின்   உருவமாகவும்,  தந்தையை  வீரத்தின் வடிவமாகவும் கருதிப் போற்றுதல்  தமிழ்  வழக்காகும்.  அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய் நாடு  என்று   நினைக்கும்   பொழுது  அன்பினால் இன்பம்  பிறக்கும்; தந்தை நாடு  …

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2   இவ்வுலகில்     முன்னணியில்  நிற்கும்  நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத்   தலைக்கொண்டு  போற்றுகின்றன. தமிழ்நாட்டில்  சில காலத்திற்கு  முன்னர்   அந்நிய   மொழிகளில்  பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு    அழகென்றும்,    தாய்மொழியைப்   புறக்கணிப்பது தவறன்றென்றும்  அறிவாளர்  கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய    கொள்கைகள்    அகன்று   ஒழிய,  ஆர்வம்   நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின்      நயமறிந்த  கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும்  தமிழகத்தை  அன்பு  ததும்பும்  இன்ப மொழிகளாற் போற்றும் அழகு  எல்லை   யற்ற   இன்பம்  தருவதாகும். …

பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

[1]   பேரா.சி.இலக்குவனார்  வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்!   தமிழ்க்கென மலர்ந்து தமிழ்க்கென வாழ்ந்து தமிழ்த்தாய் உருவமாகப் பார்க்கப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நினைவு நாள், ஆவணி 18 / செட்டம்பர் 03. இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து தமிழ்க்கடமை ஆற்றுவது நம் கடனாகும்.   பேரா.சி.இலக்குவனார் தம் தாத்தா முத்து வழியில் பள்ளியில் படிக்கும்பொழுதே கவித்திறனுடையவராக இருந்து ஆசிரியர்களாலும் உடன் பயிலும் தோழர்களாலும் பாராட்டப்பெற்றவர். அவரது தமிழ்ப்பற்றைத் தனித்தமிழ்ப்பற்றாக ஆற்றுப்படுத்தியவர் அவரது ஆசிரியர்  அறிஞர் சாமி.சிதம்பரனார். இலக்குவனார்க்குப் பெற்றோர் இட்ட பெயர்…

குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று!

குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று!   சோலையைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் தண்டலை என்பதாகும். அது தண்டரை எனவும், தண்டலம் எனவும் வழங்கும்.   திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த குழித்தலை என்னும் ஊர் குழித்தண்டலை என்று முன்னாளில் வழங்கிற்று. காவிரிக் கரையில், பள்ளத்தாக்கான ஓர் இடத்தில், செழுஞ் சோலைகளின் இடையே எழுந்த ஊரைக் குழித்தண்டலை என்று அழைத்தனர் பண்டைத் தமிழர்.   இன்னும் தொண்டை நாட்டில் பூந்தண்டலம், பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் சோலை சூழ்ந்த ஊர்களாக முற்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.   –…

சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்? – இரா.பி. சேது(ப்பிள்ளை)

சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்?   தோப்பு   மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும். தோப்பின் அடியாகப் பிறந்த ஊர்களும் உண்டு. மந்தித் தோப்பு என்னும் ஊர் நெல்லை நாட்டிலும், மான்தோப்பு இராமநாதபுரத்திலும், நெல்லித் தோப்பு தஞ்சை நாட்டிலும், வௌவால் தோப்பு தென்னார்க்காட்டிலும் விளங்குகின்றன. சுரம் சுரம் என்பது காடு. தொண்டை நாட்டில் உள்ள திருச்சுரம் இப்பொழுது திரிசூலம் என வழங்குகின்றது. அந்நாட்டில் உள்ள மற்றோர் ஊரின் பழம் பெயர் திருவிடைச்சுரம். அது திருவடிசூலம் எனத் திரிந்துவிட்டது….

பம்புளி என மருவிய பைம்பொழில் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

பம்புளி என மருவிய பைம்பொழில்     மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத்…

காவும் ஆரியங்காவும் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

 கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆரியங்காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன் என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்பர். ஆரியங்காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ்சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும்.   தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையுமுடைய அக்…