வெருளி நோய்கள் 341 – 345 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 336 – 340 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 341 – 345 341. இருப்பு இயக்க வெருளி – Fysikophobia இருப்பு இயக்கம்(physical plane of existence) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இருப்பு இயக்க வெருளி. 00 342. இருப்புப்பாதை கடப்பு வெருளி – Bahnubophobia இருப்புப்பாதை கடப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் இருப்புப்பாதை கடப்பு வெருளி. கடப்புவெருளி(Agyrophobia/ Dromophobia/ Banmaxianphobia) உள்ளவர்களுக்கும் தொடரி வெருளி(Siderodromophobia) உள்ளவர்களுக்கும் இவ்வெருளி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்புப்பாதையைக் கடப்பது சடடப்படியும் தவறு. நமக்குக் கேடு…
