நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-இலக்குவனார் திருவள்ளுவன்
(நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-தொடர்ச்சி) இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க! சென்றே யெறிப வொருகால் சிறுவரை நின்றே யெறிப பறையினை – நன்றேகாண் முக்காலைக் கொட்டினுண் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. (நாலடியார் பாடல் 24) பொருள்: (பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்; சற்று நேரம் சென்றதும் மீண்டும் ஒரு முறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிக்கும் பொழுது இனி இறக்கப் போகிறவர்கள், பாடையில் இறந்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டு, நெருப்புச்…