நன்மை நீஇ! தின்மை நீஇ!
நன்மை நீஇ! தின்மை நீஇ! நன்மை நீஇ; தின்மை நீஇ; நனவு நீஇ; கனவு நீஇ; வன்மை நீஇ; மென்மை நீஇ; மதியு நீஇ; விதியு நீஇ; இம்மை நீஇ; மறுமை நீஇ; இரவு நீஇ; பகலு நீஇ; செம்மை நீஇ; கருமை நீஇ; சேர்வு நீஇ; சார்வு நீஇ; நீலகேசி உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: பக்கம் 187
வாழி நெஞ்சே! – வளையாபதி
நீல நிறத்தனவாய் நெய் கனிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே காலக்கனலெரியின் வேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக் கண் நில்வாழி நெஞ்சே உத்தம நன்னெறிக் கண் நின்னூக்கஞ் செய்தியேல் சித்தி படர்தல் தெளி வாழி நெஞ்சே ! வளையாபதி
