எழுத்தைக் காப்போம்! : அன்றே சொன்னார்கள் 30  – இலக்குவனார் திருவள்ளுவன்

(செய்க பொருளை!-தொடர்ச்சி)     எழுத்தைக் காப்போம் !                                                                                                       உலகம் பார்வைகள் இணைக்கப்பட்ட பட்டை. ஒவ்வொரு மொழியும் மறையும் பொழுது அதற்குரிய பார்வைப் பகுதியை இழந்து விடுகிறது என்கிறார் பிரான்கோயிசு (Franபois Grosjean 1946, மேனாள் இயக்குநர், மொழி-பேச்சு ஆய்வகம், சுவிட்சர்லாந்து) மொழியைக் கண்ணாகக் கருதி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்த கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு              ( திருக்குறள் 392) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இதனையே ஔவையார்  எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 தொடர்ச்சி) 08   “தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே…