நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா – தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு. (நாலடியார், பாடல் 19) பொருள்: கொடுங்காற்றால் கனி மட்டும் அல்ல, கனியாத காய்களும் வீழ்வதுண்டு. எனவே, இளமையாகத்தான் உள்ளோம், பின்னர் நல்வினை புரியலாம் என எண்ணாது உள்ளதை மறைக்காது அறம் செய்க! சொல் விளக்கம்: முற்றி=முதிர்ந்து; இருந்த= இருந்த; கனி=பழங்கள்; ஒழிய= மட்டுமல்லாமல்; தீவளியால்= வலிய காற்றால்; நல்= நல்ல; காய்=காய்கள்; உதிர்தலும்=விழுதலும்;…
நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு!, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு! வெறியயர் வெங் களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க, மறிகுளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி யறிவுடை யாளர்க ணில் பொருள்: பலிபீடத்தின் அருகில் உள்ள ஆடு தன்னை வெட்டிக் கொல்லப் போகிறார்கள் என உணராமல் எதிரில் உள்ள பூமாலையில் கட்டப்பட்டுள்ள இலைதழைகளை உண்கிறது. இதைப்போன்று நிலையற்ற இளமை இன்பத்தில் மகிழ்தல் நல்லறிவுடையாளர்களிடம் இல்லை. சொல் விளக்கம்: வெறி=வெறியாடுதலை; அயர்=செய்கின்ற; வெம்=கொடிய; களத்து=பலிக்களத்தில்; வேல்மகன்=பூசாரி; பாணி=கையில், முறி=தளிர்; ஆர்= நிறைந்த; நறும்=மணக்கும்;…
தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவேந்தர் விழா – பாவரங்கம், கருத்தரங்கம்
வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30. முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62 தலைமை: த.மணிசேரன் பங்கேற்பு: தொடக்கவுரை: அ.சி.சின்னப்பத்தமிழர் முழக்கம் எழுப்பல் – தமிழ்நேயன் சிறப்புரைகள்: பாவேந்தரும் தமிழும் – மறை தி.தாயுமானவன் வ.சுப.மாணிக்கனார் – செந்தமிழ்வாணன் பெரியாரும் திருக்குறளும் – வாலாசா வல்லவன் பரிமேலழகர் முதல் நாகசாமி வரை – இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை – அன்பு, சோம.பொன்னுச்சாமி, க.ச.கலையரசன், சேகர், ச.அழகுஒளி
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 இன் தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 (குறள்நெறி) 31. அற வழியில் சிறப்பும் செல்வமும் பெறு! 32. அறத்தை ஆக்கமாகக் கருது! அதனை மறந்து கேடுஉறாதே! 33. இயன்றவழியில் எல்லாம் அறம் செய்க! 34. அறவாழ்விற்கு மனமாசின்றி இரு! 35. அழுக்காறு அகற்றி அறவாழ்வு வாழ்! 36. அவாவினை நீக்கி அறப்பாதையில் செல்! 37. வெகுளியைப் போக்கி அறநெறியில் நில்! 38. இன்னாச்சொல் அகற்றி அறமே போற்று! 39. அறத்தினை அன்றன்றே ஆற்று! 40. …
மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்
வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்! உலகத்திருக்குறள் மையம் மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல் ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை 27.10.2018 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை பெயர் சூட்டுநர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் க.தமிழ்ச்செல்வன் முனைவர் இரா.மதிவாணன் இலக்குவனார் திருவள்ளுவன் திருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா நண்பகல் 12.00 சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! – தமிழ்நாடன், நக்கீரன்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! ‘ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர். பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர். அவரைப்பற்றிப் பேசும் தகுதி மதவெறியர்களுக்கு இல்லை’என்கிறார்கள் தமிழ்க் கவிஞர்கள். கவிஞர் வைரமுத்துவை மையமாக வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் தீப்பந்தம்… இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு பக்கம் பதற்றப் பரபரப்பைப் பற்றவைக்க… இன்னொரு பக்கம் வைரமுத்து மீது வழக்குகள் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன. இஃது இலக்கியவாதிகள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இவ்வளவு பதற்றப் பரபரப்பிற்கும் காரணம்,…
இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்! இலங்கையைத் தமிழில் குறிப்பிடும் நம்நாட்டுத்தமிழர்களும் இலங்கைத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் அரசுமுறைப் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணிச் சிரீ இலங்கா என்றே குறிப்பிடுகின்றனர். ஈழம், இலங்கை என்பன தொடர்புடைய பெயர்களே! ஈழத்துப் பூதன்தேவனா் என்னும் புலவர் சங்கக்காலத்தில் வாழ்ந்துள்ளார். ஈழத்து உணவு என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத்தில் இலங்கை என்றும் சொல்லாட்சி உள்ளது. ‘தொன்மாவிலங்கை எனச் சிறுபாணாற்றுப்படை குறிக்கிறது. ‘இலங்கை கிழவோன்’ எனப் புறநானூறு(379) குறிப்பிடுகிறது. ஈழம் என்றால் பொன் எனப் பொருள்….
உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு
உலகத்திருக்குறள் மையம் திருவள்ளுவர் திருநாள் விழா உயராய்வு எழுச்சி மாநாடு தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017 காலை 7.00 முதல் மாலை 5.00 வரை வள்ளுவர் கோட்டம், சென்னை காலை 7.00 திருக்குறள் முற்றோதல் காலை 8.30 சிற்றுண்டி காலை 9.00 நூல்கள் வெளியீடு நூலாசிரியர்கள்: திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் திருக்குறள் செல்லம்மாள் திருக்குறள் தி.வே.விசயலட்சுமி வெளியிடுநர் : இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் ப.தாமரைக்கண்ணன் முனைவர் பா.வளன்அரசு வாழும் வள்ளுவம் சிறப்பிதழ் வெளியீடு: முனைவர் கோ.மோகன்ராசு முற்பகல் 10.30 அறக்கட்டளைச்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 3/7 “சி.இலக்குவனாரின் தமிழ்மொழிச் சிந்தனை”கள் யாவை என ஆய்வாளர் மு.ஏமலதா அருமையாக விளக்கியுள்ளார். சமற்கிருதச் சார்புடையதாகத் தொல்காப்பியத்தைப் பிறர் தவறாகச் சொல்லி வந்ததை மாற்றித் தமிழ்மரபில் தமிழ் மரபு காக்க உருவாக்கப்பட்டது தொல்காப்பியம்; தமிழில் தூய்மை பேணுவதே தமிழையும் தமிழரையும் காக்கும்; வீட்டுச் சமையல் போன்ற கலப்பில்லாத தூயதமிழே தேவை;…
புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்ச்சிப் படங்கள், ஆக.2016
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள் – இரா.இளங்குமரன்
மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள் மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைச் சான்றோன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்; மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில் ஒன்றச் செய்வதும் திருக்குறள். -புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே! – இலக்குவனார் திருவள்ளுவன்
அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே! அதிமுக வெற்றி பெற்றதற்கு “வைகோவிற்கு நன்றி கூற வேண்டும்”, “விசயகாந்திற்கு நன்றி கூற வேண்டும்”, “இராமதாசிற்கு நன்றி கூற வேண்டும்” என்றெல்லாம் வஞ்சப்புகழ்ச்சியாகத் திமுக அன்பர்கள் கூறி வருகின்றனர். உண்மையில், ‘அதிமுகவின் ஆ அணி’ என மக்கள் நலக்கூட்டணியைக் கூறிவந்த திமுகதான் அதிமுக துணை அணியாகச் செயல்பட்டு அதனை வெற்றி பெறச் செய்துள்ளது என்பது வெள்ளிடை மலை. அதிமுக, திமுக நேரடியாக மோதிய தொகுதிகள் 172இல் அதிமுக 83 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. திமுக…
