பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள் –  இலக்குவனார் திருவள்ளுவன்

  பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள்     ‘திருவேலன் ஒரு  பொறியாளர்’ என்று மட்டும் அறிந்திருப்போம். ஆனால் விரிந்து பரந்த அறிவு மிக்கவர். தரக்கட்டுப்பாட்டை நிலைப்படுத்தல், மேம்படுத்தல், ஆய்விடல், பயிற்சி யளித்தல் எனப் பல்துறைத் தொழில் நுட்பட அறிவராகத் திகழ்கிறார். வெளிநாடுகளில் பணியாற்றியதால் ஆங்கிலம்,செருமானியம், சப்பானியம்முதலான பல மொழிகள்  அறிந்தவர். பன்மொழிகள் அறிந்திருந்தாலும் தாய்த்தமிழை மறக்காதவர்.   பொறியாளராகப் பல நாடுகளில் பணியாற்றியவர் எனப் பொதுவாக எண்ணுவதைவிட அவர் எத்தகைய பணியாற்றிவர், ஆற்றிவருபவர் என்பதை அறிந்தால்தான் அவரின் சிறப்பை உணர முடியும்….

நெகிழ வைத்த அயல்நாட்டார் பண்புகள் – பொறி. இலக்குவனார் திருவேலன்

  நான் அயல்நாடுகளில் தரக்கட்டுப்பாட்டுப் பொறியாளராகப் பணியாற்றும்போது சுவையான நிகழ்ச்சிகள் பல நடந்ததுண்டு. அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.   முதல் நிகழ்வு ஒரு கிழக்குஆசிய நாட்டில். நான் ஒரு பெரிய நிறுவனத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருக்கிறேன். அந்த நிறுவனம் எமது வாடிக்கையாளருக்கு ஒரு மிகப் பெரிய, தொடர்-வார்ப்பு உருக்கு ஆலையை (Continuous Casting Plant) உற்பத்தி செய்து அளிக்கும் பணியைச் செய்து முடிக்கும் தருவாயில் உள்ளது. அன்றைய மதிப்பில் சில நூறுகோடி உரூபாய். தொடர்புடைய எந்திரப் பொருட்கள் அனைத்தும் கப்பலில்…