வெருளி நோய்கள் 351 – 355 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 346-350 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 351 – 355 இலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இலை வெருளி.சில இலைகள் கீரைகளாக உணவிற்குப் பயன்படுகின்றன. சில இலைகள் மருந்தாக மூலிகைகளாகப் பயன்படுகின்றன. சில இலைகள் அழகாகக் காட்சி யளிக்கின்றன. ஆனால், இலைகளின் தோற்றம், பயன்பற்றிய எண்ணம் எதுவுமில்லாமல் காரணமின்றி இலைகள் மீது அச்சம் கொள்வோர் உள்ளனர்.00 இலையுதிர் காலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் இலையுதிர் கால வெருளி.கோடைக்காலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடையில் இலையுதிர்காலம் வருகிறது. இக்காலத்தில் இலைகள் பழுப்பு மஞ்சள் நிறமடைந்து உதிர்வதால் குப்பைகளாக…
