நடைமுறை ஆண்டுப் பிறப்பு வாழ்த்துகள் 2026 “நானிலம் சிறக்கவே நன்னெறி காணவே நலம் திகழவே வளம் நிறையவே அல்லன அழியவே நல்லன பெருகவே நல்லோர் உயரவே இல்லார்க்கும் வல்லார்க்கும் நல்லார்க்கும் பொல்லார்க்கும் எல்லார்க்கும் வாழ்த்துகள் நடைமுறை யாண்டில் என்றென்றும் வாழிய!” நடைமுறை ஆண்டு எனக் குறிப்பதன் காரத்தை அறிய 2019 இல் அகரமுதல இதழில் எழுதிய கட்டுரையை அளிக்கின்றேன். நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும்  சனவரி முதல் நாளன்று நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம்.  ஆனால் நாம் எண்ணுவதுபோல் இஃது ஆங்கில ஆண்டுமல்ல, கிறித்துவ…