உடல் உறுப்புகள் விளக்கம், இலக்குவனார் திருவள்ளுவன்
உடல் பழந்தமிழர்கள் உடலுறுப்புகளுக்கு வைத்துள்ள பெயர்களும் அவர்களது அறிவியல் அறிவை உணர்த்துன்றன. சான்றாகச் சிலவற்றைப் பார்ப்போம். ‘உடு’ என்பதன் அடிப்படையில் உயிருக்கு உடுப்பு போல் அமைந்தது உடல் எனப்பட்டது. பண்டத்தை உள்ளே வைத்துக்கட்டப்பட்டது பொதி. அதுபோல் உறுப்புகளை அடக்கிய உடல் ‘பொதி’ எனப்பட்டது. கட்டப்படுவதை யாக்கை என்பர். தோல், நரம்பு, எலும்பு, தசை, குருதி முதலிய தாதுக்களால் யாக்கப் பெற்றிருப்பதால் யாக்கை என்றனர். கூடை முடையப் பெற்றிருப்பது போல் ‘தாதுக்களால்’ முடையப்பட்டது முடை என்று சொல்லப்பட்டது. உயிர் புகுவதற்குரியது உடல்; ஆதலின் உடலைப் புகல் என்றனர்; திரண்டு அமைந்ததைப் பிண்டம் என்பர்; உயிர்மிகளால் திரண்டுஅமைந்த உடல் பிண்டம் எனப்படுகிறது. இவை போன்று…
