முனைவர் க.இந்திரசித்து நினைவேந்தல் நிகழ்வு – உடுமலைப் பேட்டை

மறைந்த பேராசிரியர்  “முனைவர் க.இந்திரசித்து” நினைவேந்தல் நிகழ்வு!   தி.ஆ.2047, கும்பம் (மாசி):23 / 06.03.2016 ஞாயிறு காலை 9:30மணிக்கு உடுமலைப் பேட்டை, தளிச் சாலையில் உள்ள கிளை நூலகத்தில்  நிகழ உள்ளது! ஐயாவின்பால் தொடர்புள்ள மாணாக்கர்கள் , பேராசிரியர்கள் , பெரியார் தொண்டர்கள் , தமிழறிஞர்கள், தமிழுணர்வாளர்கள் ஆகியோருள் ஒருவராய்த் தாங்களும் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டுகிறோம்! அன்புடன் உடுமலை நூலக வாசகர் வட்டம், உடுமலைப் பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம். 9842091244 9842218014 9486153494

ஐம்பெரும் விழாக்கள், உடுமலைப்பேட்டை

தமிழமுது பருக…. தவறாது வருக….! அனைவருக்கும் வணக்கம் ! வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2047, சுறவம் ( தை ) : 2 அன்று திருவள்ளுவர் நாள் விழா முதலான ஐம்பெரும் விழாக்கள் உடுமலைப்பேட்டை, திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன. உணர்வாளர்கள் – நண்பர்கள் – தோழர்கள் – மாணாக்கர்கள் – குழந்தைகள் – தாய்மார்கள் – பொதுமக்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு, விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்! அன்புடன் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம், உடுமலைப்பேட்டை – 642 126….