48. சனாதனம் யாருக்கும் எதிரி கிடையாது – அண்ணாமலை 49. திருப்பாணாழ்வார் கோயிலில் நந்தி சிலை விலகியிருப்பதே சனாதனம் – அண்ணாமலை 50. சனாதனம் அனைத்து மதங்களிலும் உள்ளது – தினகரன். -யாவும் பொய்யே – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 45-47 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 48-50 ? “திருப்பாணாழ்வார் கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும். ஏன் இப்படி விலகி இருக்கிறது? ஒரு கீழ்ச் சாதியை சேர்ந்த மனிதர் சிவனைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அவரது சாதியைக் காரணம் காட்டி அவருக்கு அங்கிருந்தவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவனின் நந்தி (காளை), தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று விலகிச் சென்று உட்கார்ந்து கொண்டு, அந்த மனிதர் சிவனைப் பார்க்க அனுமதித்தது. இதுதான் சனாதன தருமம்” என்று அண்ணாமலை…
42. சனாதனத்தில் உயர்வு தாழ்வு இல்லை ; 43. ஆலயத்தில் நுழையத் தடை இல்லை” 44.சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது” : ஆளுநர் இரவி சொல்வன சரிதானா? – இலக்குவனார்திருவள்ளுவன்
(சனாதனம் பொய்யும் மெய்யும் 41 – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 பல நகரங்களிலும் ஊர்களிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்துள்ளன என்பதை வரலாறு சொல்கிறது. ஆரியத்தின் பாய்ச்சல் – வருணாசிரமத்தின் இரும்புக் கை – சனாதனத்தின் கொடுங்கை நீதித்துறை வரை பாய்ந்துள்ளதற்குப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஒன்று பார்ப்போம். 1874இல் மூக்க நாடார் என்பவர் மதுரையில் கோயில் ஒன்றில் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அறிந்த கோயிற் பணியாளர்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். இதனால், நாடார்கள் பணியாட்கள் மீது வழக்கு தொடுத்தனர்….
41. சமநீதி வழங்குவதே சனாதனம். உயர்வு தாழ்வு கற்பிப்பது சனாதனம் அல்ல என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் பொய்யும் மெய்யும் 38-40 – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 41 கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் நம்பக்கூடியவர்களும் இருப்பார்கள் என்று பொய்களை முரசறைவோர் இருக்கத்தான் செய்கின்றனர். என் செய்வது? பின்வரும் மனு கூறும் விதிகளைப் பாருங்கள். பிறகு முடிவெடுக்கலாம். நீதியில் மட்டுமல்ல நீதி வழங்கும் பொறுப்பிலும் பிராமணருக்கு ஒரு நீதி பிறருக்கு வேறொரு நீதி என்பதை உணரலாம். பிராமணக் குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது. (மனு 8. 20) பெண்கள் புணர்ச்சி விசயத்திலும்,…
சனாதனத்தில் பெண் அடிமைத்தனத்திற்கும் உயர்வு தாழ்விற்கும் இடமில்லையாமே? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் பொய்யும் மெய்யும்: 22-23 * தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 24-25 “பெண் தன் விருப்பப்படி வாழக்கூடாது. சிறு வயதில் தந்தைக் கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது” (மனு 5. 148). “கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனாயினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!” (மனு 5.154) கடவுளாகச் சொல்லப்படும் இராமன், பெண்களை…
