(சங்கப் புலவர்கள் பொன்னுரை –16 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! உள் இலோர்க்கு வலியாகுவன்கேள் இலோர்க்குக் கேளாகுவன்                புறநானூறு 396 : 10-11 பாடியவர்: மாங்குடி கிழார்.பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.திணை: பாடாண்.துறை: கடைநிலை. மன்னன் எழினியின் மகன் ஆதன் எழினியாதன் எனப்படுகிறான். உள் = மனவெழுச்சி (ஊக்கம்). வலி = பற்றுக்கோடு (ஆதரவு), வலிமை. கேள் = உறவு. வாட்டாறு என்னும் பெயருடைய ஓர் ஊர்…