(வெருளி நோய்கள் 451 – 455 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 456 – 460 456. உள்ளாடை வெருளி – Esorouchaphobia உள்ளாடை குறித்த வரம்பற்ற பேரச்சம் உள்ளாடை வெருளி.உள்ளாடைகளைக் கடைகளில் கேட்பதற்கு அணிவதற்கு மாற்றுவதற்கு எனப் பல நிலைகளில் உள்ளாடைகள் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். உள்ளாடைகள் மூலம் நோய் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.Esoroucha என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உள்ளாடை என்று பொருள்.அழுக்கு உள்ளாடை வெருளி(snickophobia) உள்ளவர்களுக்கு உள்ளாடை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.அமெரிக்க அதிபர் கிளிண்டன், தன் செயலர்…