தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழா – கருத்துரைக் கூட்டம்
2047, தைத்திங்கள் / சுறவத்திங்கள் 24ஆம் நாள் / பிப்.07, 2016/ முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழா- கருத்துரைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையுரை ஆற்றினார். திருவாவடுதுறை இளையபட்டத்தார், முனைவர் க.தமிழமல்லன் முதலியோர் கருத்துரை வழங்கினர். [படத்தை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]
மும்பையில் கூடுவோம்! – உலகத் தமிழர் பேரமைப்பு
மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகளை உள்ளடக்கிய “உலகத் தமிழர் பேரமைப்பு ” சார்பாக மும்பை தாராவி இல் உள்ள காமராசர் ஆங்கிலப் பள்ளியில் வரும் சூன் 15ஆம் நாள் மாலை 6 மணி முதல் நூல் வெளியீட்டு விழாவும் ஆவணப்படம் திரையிடலும் நடக்க இருக்கிறது. இந் நிகழ்ச்சியில், பவா சமுத்துவன் எழுதிய “மேதகு பிரபாகரன்- வாழ்வும் இயக்கமும்” , தோழர் பொழிலன் எழுதிய “தமிழ்த்தேசம்” ஆகிய நூல்களின் வெளியிட்டு விழாவும் ,செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் இயக்கிய “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது…
